ரஷ்ய ஏரோப்ளோட் விமானம் (Russian Aeroflot) தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்ய கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயர்லாந்து நிறுவனம் ஒன்றினால் முன்வைக்கப்பட்ட இந்த வழக்கு, இன்று (15) வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் அருண பெரேரா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாது, எனவே வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார்.