வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் இதுவரை 199.71 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 200 கோடி டோஸ் என்ற சாதனையை எட்டுவதற்கு 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட வேண்டியுள்ளது.
இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் இரு டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் இலவசமாக போடப்படுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது. பிறகு தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போடப்பட வேண்டும்.
இந்தியாவில், இதுவரை 1,99,71,61,438 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 22,93,627 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.இன்னும் ஒரு சில நாட்களில் 2 பில்லியன் டோஸ் என்ற சாதனை படைக்கப்பட உள்ளது. இதற்கு இன்னும் 28,15,144 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
18 ஆயிரம் பேர் நலம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,044 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18301 பேர் நலமடைந்ததால், கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4, 30,63,651 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 1,40,760 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 56 பேர் உயிரிழந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,25,660 ஆனது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement