செம சான்ஸ்.. 11 மாத சரிவில் தங்கம் விலை.. வாங்கலாமா வேண்டாமா.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

நடப்பு வாரத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து ஐந்தாவது நாளாக கடந்த அமர்வில் சரிவினைக் கண்டுள்ளது.

இது அமெரிக்க டாலரின் மதிப்பானது 19 மாத உச்சமான 109.30 டாலரை எட்டிய நிலையில் சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம்.

ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட்-ல் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 125 ரூபாய் முடிவடைந்து, 50,103 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே சர்வதேச சந்தையில் 0.21% குறைந்து, அவுன்ஸுக்கு 1706 டாலராக முடிவடைந்துள்ளது.

மாற்றுத்திறனாளி பார்க்கிங் இடத்தை பயன்படுத்திய மாற்றுத்திறனாளிக்கு ரூ.94,000 அபராதம்.. ஏன் தெரியுமா?

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

கமாடிட்டி நிபுணர்கள், தங்கம் விலையானது அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தொடர்ந்து குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் வரவிருக்கும் கூட்டத்தில் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையில் ஸ்பாட் சந்தையில் 1675 – 80 டாலர்கள் உடனடி சப்போர்ட் ஆகவும் உள்ளது. இது அவுன்ஸூக்கு 1620 டாலர்களுக்கும் மீடியம் டெர்மில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் என்ன நிலவரம்?

இந்திய சந்தையில் என்ன நிலவரம்?

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 51,500 – 48,800 என்ற லெவலில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பானது தங்கம் விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்தலாம்.

ரூபாய் சரிவு
 

ரூபாய் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தையில் தங்கம் விலையினை அதிகம் குறையாமல் தடுக்கலாம். அதிகரித்து வரும் பணவீக்கம் மேற்கோண்டு தங்கம் விலையினை தூண்டலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

நிபுணர்களின் கருத்து என்ன?

நிபுணர்களின் கருத்து என்ன?

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றாலும், இது வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுக்கலாம். இது பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில் மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று சரிவினைக் காணலாம். இது முதலீட்டாளர்களை குறைந்த விலையில் வாங்க தூண்டலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 4627 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து, 37,016 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

மேலும் சென்னையில் தூய தங்கத்தின் விலையும் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 5048 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,384 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 50,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 30 பைசா அதிகரித்தும், 60.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 607 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 60,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

 

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று – ரூ.46,270

மும்பை – ரூ.46,600

டெல்லி – ரூ.46,600

பெங்களூர் – 46,700

கோயம்புத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,270

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold prices hits 11 month low amid soaring dollar? should you buy or wait for more correction?

gold prices hits 11 month low amid soaring dollar? should you buy or wait for more correction? /செம சான்ஸ்.. 11 மாத சரிவில் தங்கம் விலை.. வாங்கலாமா வேண்டாமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.