டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கருக்கான எஸ்.சி, எஸ்.டி பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுக செய்ய உள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஓன்றிய அரசு அறிமுக செய்ய உள்ள புதிய மசோதாக்கள் விவரங்களை மக்களவை செயலாளர் வெளியிட்டிருக்கிறார். நகராட்சி அளவிலான வளர்ச்சி திட்டங்களை கொண்ட கண்டோன்மெண்ட் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. பன்மாநில கூட்டுறவு சங்க திருத்த மசோதா, திவால் சட்ட திருத்த மசோதா, மத்திய பல்கலைக்கழங்கள் திருத்த மசோதா, தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதில் 2 அரசியல் அமைப்பு திருத்த மசோதாக்களும் இடம் பெற்றிருக்கின்றன. சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாட்டில் எஸ்.சி, எஸ்.டி பட்டியலில் திருத்தும் செய்வதற்கான மசோதாக்களும் அறிமுக செய்யப்பட இருப்பதாக மக்களவை செயலாளர் வெளியிட்டிருக்கும் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.