அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த 11 வாரங்காளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இது இன்னும் சரிவினைக் காணலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வரும் நிலையில், இது ரூபாய் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஆடிட்டர் உதவி இல்லாமல் நீங்களே வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? இதோ எளிய வழிமுறை!
தொடர் சரிவில் ரூபாய்
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், இது ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது ரூபாயின் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
அதோடு தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இதுவும் ரூபாய் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
பணவீக்கம் Vs ரூபாய்
இதற்கிடையில் வரவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் காரணமாக அமெரிக்காவில் அதிகளவிலான முதலீடுகள் செய்யப்படலாம் என்ற கணிப்பும் எழுந்துள்ளது.
முதலீடுகள் வெளியேற்றம்
இதனால் குறைவான வட்டி கொடுக்கும் இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். இதன் காரணமாக புதிய முதலீடுகளும் குறையலாம். ஏற்கனவே இருக்கும் முதலீடுகளும் வெளியேற வழிவகுக்கலாம். கடந்த வியாழக்கிழமையன்று ரூபாயின் மதிப்பானது 79.87 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இதே வெள்ளிக்கிழமையன்று 79.96 ரூபாயாகவும் முடிவடைந்தது. தொடர்ச்சியாக கடந்த ஐந்து அமர்வுகளாகவே வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது.
இன்னும் குறையலாம்
தற்போது ரூபாய் மதிப்பானது 80 ரூபாய் என்ற லெவலில் சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. இது இன்னும் மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அன்னிய முதலீடுகள் வெளியேறுவதால் இருக்கலாம். ஒரு வேளை அன்னிய முதலீடுகள் திரும்ப சந்தையில் செய்யப்படுமாயின், ரூபாய் மதிப்பானது சரிவது குறையலாம்.
பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கலாம்
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டாலும், அதுவும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு ரூபாயில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் உள்ளது.
இதற்கிடையில் வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் எப்படி இருக்குமோ? வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா? அடுத்து என்ன செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Indian Rupee weakens for 11th straight week amid investments exit
Indian Rupee weakens for 11th straight week amid investments exit/அதல பாதாளத்தில் ரூபாய்.. தொடர்ந்து வரலாறு காணாத சரிவு.. இனியும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை!