மதுரை: தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுதும் வணிகம் செய்ய வேண்டும் என மதுரையில் வணிகர் சங்கங்களின் விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுகளில் இருந்து தமிழ்நாட்டில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது. வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள். வட மாநில வணிகர்களை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த தமிழக வணிகர்கள் முன் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.