2002 கோத்ரா கலவரத்துக்குப் பின் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஹ்மத் பட்டேல் முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
மோடி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சமீபத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டீஸ்டா சேதல்வாடுடன் கைகோர்த்து செயல்பட்டதாக அஹ்மத் பட்டேல் மீது குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இறந்து போன ஒருவரான அஹ்மத் பட்டேல் மீது அபாண்டமாக பழிசுமத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது.
தனது ஆட்சியில் நடந்த கோத்ரா வன்முறை குறித்து இதுவரை வாய்திறந்து எதுவும் கூறாத பொறுப்புகளை தட்டிக் கழித்த அரசுக்கு தலைமை வகித்த நரேந்திர மோடியின் ஆட்சியில் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
கீழ்த்தரமான அரசியல் செய்து வருபவர்களுக்கு வக்காலத்து வாங்குவதில் சிறப்பு புலனாய்வு குழு கைதேர்ந்தது என்பது அதன் முன்னாள் தலைவருக்கு பிரதமர் அளித்த கௌரவத்தில் இருந்தே தெரியவரும் என்று ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.