Wristwatch of Adolf Hitler: தங்க வாட்சா இருந்தாலும் இந்த விலை டூ மச் மிஸ்டர் ஹிட்லர்

அடால்ஃப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வருகிறது. அடால்ஃப் ஹிட்லரின் 44வது பிறந்தநாளான ஏப்ரல் 20, 1933 அன்று தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள் கைக்கடிகாரம் அவருகு பரிசாக கிடைத்ததாக கூறப்படுகிறது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கைக்கடிகாரத்தை ஏலத்தில் விற்கிறது, இந்த கடிகாரத்தின் விலை $2 முதல் $4 மில்லியன் வரை விற்பனையாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

இந்த சிறப்பான கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஒன்று, ஹிட்லரின் பிறந்த நாள், அடுத்து அவர் ஜெர்மனியின் அதிபராக நியமிக்கப்பட்ட நாள் மற்றும் 1933 தேர்தலில் நாஜி கட்சி வெற்றி பெற்ற நாள். நாஜிக் கட்சி, 1933-ல் ஜெர்மனியின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிட்லருக்கு அவரது கட்சி இந்த கடிகாரத்தை பரிசாக வழங்கியதாகக் கருதப்படுகிறது.

வெள்ளிக்கிழமை, மே 4, 1945 அன்று, பவேரியாவின் மலைப்பகுதிகளில் உள்ள பெர்ச்டெஸ்காடனில் ஹிட்லர் பின்வாங்கினார். அப்போது, ஒரு பிரெஞ்சு சிப்பாய்க்கு ஹிட்லரின் கைக்கடிகாரம் கிடைத்தது.

மேலும் படிக்க | நிலவின் துகள்கள் மற்றும் கரப்பான்பூச்சிகள் ஏலம்விடப்படுவதற்கு நாசா எதிர்ப்பு 

தற்போது ஹிட்லரின் கைக்கடிகாரத்தை ஏலம் விடும் நிறுவனமான அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல், வாட்ச் தயாரிப்பாளர்கள் மற்றும் இராணுவ வரலாற்றாசிரியர்களளிடம் இந்த கடிகாரம் தொடர்பான விஷயங்களை உறுதி செய்துள்ளதாக கூறுகிறது.

கடிகாரத்தின் பின்னணியை ஆய்வு செய்தபோது, இந்த தங்க கைக்கடிகாரத்தை அடால்ஃப் ஹிட்லர் வைத்திருந்தார் என்ற ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறது.

இருப்பினும், கடிகார தயாரிப்பாளரான வாட்ச்ப்ரோ, இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

“இது ஒரு உண்மையான Jaeger-LeCoultre வாட்ச் என்று அனுமானப்பது தவறானதாக இருக்கலாம், எனவே இதுதொடர்பாக நிறுவனம் நடவடிக்கை எடுக்கும். நிறுவனம் அதன் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. மேலும் மோசடிகள் மற்றும் போலிகள் விற்பனையைத் தடுக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக உள்ளது”என்று வாட்ச்ப்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களில் ஒன்றாக கருதப்படும் அடால்ஃப் ஹிட்லரின் தங்க கைக்கடிகாரம் ஏலத்திற்கு வந்தால் அதன் விலை சுமார் 312 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இனி டெலிகிராம் பயன்படுத்த கட்டணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.