டெல்லி மெட்ரோ ரயிலில் இளம் பெண் மற்றும் ஒரு பையன் சண்டை போட்டு வந்த வீடியோ இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
1000 ரூபாய்க்கு டி-சர்ட் வாங்கியதாக அந்த இளம்பெண் கூற அதற்கு அந்த பையன் ரூபாய் 150 கூட மதிப்பு இருக்காது என்று கூறியதுதான் சண்டைக்கு காரணம் என தெரிகிறது.
இதனை அடுத்து இருவருக்கும் சண்டை நடந்தது என்பதும் இந்த சண்டையை நகைச்சுவையுடன் ரயிலில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி மெட்ரோ ரயில்
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னத்தில் அறை
இந்த வீடியோவில் ஒரு பெண் தனது அருகிலிருந்த பையனை பளார் என கன்னத்தில் அறைகிறார். அதற்கு அந்த பையனின் ‘அம்மாவிடம் சொல்வேன்’ என்று சற்றே அழுகை குரலில் கூறுகிறார். மேலும் ‘உன்னை போல ஒரு ஆளை நான் பார்த்ததே கிடையாது’ என்று அந்த பையன் திட்டுகிறான்.
திருப்பி அடித்த பையன்
இதனை அடுத்து அந்த பெண் பையனை மீண்டும் மீண்டும் அடிக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பையன் அந்த பெண்ணையும் அடிக்க இருவரும் மாறி மாறி அடித்து கொள்கின்றனர். அதன்பின் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போது இருவரும் ஒன்றாக இறங்கி செல்கின்றனர்.
ரூ.1000 டி-சர்ட்
இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சண்டைக்கு காரணம் மிகவும் சாதாரணமானது என்று அங்கிருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர். ஜாரா என்ற கடையில் இருந்து தான் 1000 ரூபாய்க்கு டீசர்ட் வாங்கியதாக அந்த பெண் அந்த பையனிடம் கூறுகிறார். அந்த டி-சர்ட்டை பார்த்த பையன் 150 ரூபாய்க்கு மேல் இந்த டி-சர்ட் மதிப்பு இல்லை என்று கூறுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், பையனை மாறி மாறி கன்னத்தில் அடித்தார் என தெரிகிறது.
ஸ்கிரிப்ட்
இந்த சண்டையின் வீடியோ குறித்து பல்வேறு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வரும் நிலையில் இந்த சண்டை ஒரு ஸ்கிரிப்ட் ஆக கூட இருக்கலாம் என்று ஒரு சிலர் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பது உறுதியாவதால் வைரலாக வேண்டும் என்பதற்காக ஸ்கிரிப்ட் செய்திருப்பார்கள் என பலர் சந்தேகத்தை கமென்ட்ஸ்களாக பதிவு செய்துள்ளனர்.
Boy and Girl fight in Delhi Metro, Reason is Rs.1000 T shirt?
Boy and Girl fight in Delhi Metro, Reason is Rs.1000 T shirt? | டெல்லி மெட்ரோவில் மாறி மாறி அடித்து கொண்ட பையனும் இளம்பெண்ணும்… ரூ.1000 டி-சர்ட் காரணமா?