புதுடெல்லி:
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெக்தீப் தங்கர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான ஜக்தீப் தன்கர், மேற்கு வங்கத்தின் ஆளுநராக பணியாற்றுகிறார்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். மேலும் 1989 முதல் 1991 வரை மக்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
இவர். ராஜஸ்தானில் சுன்சுனூ மக்களவைத் தொகுதியிலிருந்து 1989-91இல் ஒன்பதாவது மக்களவையில், ஜனதா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
ராஜஸ்தானின் கிஷன்கர்ட் தொகுதியிலிருந்து 1993-98இல் ராஜஸ்தானின் 10வது சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
30 ஜூலை 2019 அன்று, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவரை மேற்கு வங்க ஆளுநராக நியமித்தார்.