ஒவ்வொரு துறையிலும் யார்யாரை தெரிவு செய்ய வேண்டுமோ அவர்களை தெரிந்தெடுத்து, எந்த துறையை நகர்த்த வேண்டும் என்பதை துல்லியமாக கணிப்பிட்டு செயற்படுவதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு விடயங்கள், அவர்களுக்கான மேலதிகமான விடயங்களை கையாள்வதற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவை, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்திருப்பதாக கொழும்பு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நியமனத்தின் மூலம் அவர் எதனை சாதிக்க முற்படுகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
சரத் வீரசேகர இவர்களின் தீவிர விசுவாசி. தீவிர ஒரு இனவாதியும் கூட. அவரை இதற்கு நியமிப்பதன் ஊடாக எதிர்வரும் 20ஆம் திகதி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களை யாரும் நெருக்கா வண்ணம் அதாவது எதிர்க்கட்சியினரோ அல்லது போராட்டக்காரரர்களோ சந்தித்து அவர்களின் மனதை மாற்றத வகையில் கண்காணித்து பாதுகாக்கப் போகிறார்கள்.
இதேவேளை இராணுவத்தில் இராணுவத் தளபதியை விட்டு விட்டு சவேந்திர சில்வாவை முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். அதேபோல இவர்களின் பாதுகாப்பிற்கு சரத் வீரசேகரவை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இது உட்பட இன்னும் பல முக்கிய விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,