கண்ணுார் :ஆண்களைப் போலவே மீசை வளர்த்துள்ள ஷைஜாவுக்கு ஆரம்ப காலத்தில் இருந்த கேலியும், கிண்டலும் குறைந்து வரவேற்பு அதிகரித்துள்ளது.கேரள மாநிலம் கண்ணுாரை சேர்ந்தவர் ஷைஜா,34. சிறுமியாக இருந்தபோதே இவருக்கு மெல்லிய மீசை இருந்தது. இதை நீக்க மருத்துவம் செய்தும் மீசை நீங்கவில்லை. அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஷைஜாவை கேலியும் கிண்டலும் செய்து வந்தனர்.
இதனால் அவர் மிகுந்த மன வேதனை அடைந்தார். நாளடைவில் ஷைஜாவுக்கு வைராக்கியம் ஏற்பட்டது. மெல்லிய மீசையை நன்கு வளர்த்து ஆண்களைப் போலவே ஸ்டைலாக மீசை வைத்துக் கொண்டார். இதைஅடுத்து அவரை கேலி செய்தவர்களே ஆச்சர்யத்துடன் பார்க்க ஆரம்பித்தனர்.இந்நிலையில், பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
பெண் பார்க்க வரும்போதே, லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் திருமணத்துக்குப் பின்னரும் நான் மீசை வைத்துக் கொள்வேன் என ஷைஜா கூறினார். இதற்கு லட்சுமணனும் அவரது குடும்பத்தினரும் தடை சொல்லவில்லை. கண்ணுாரில் வசித்த ஷைஜா, திருமணத்துக்குப் பின் பாலக்காட்டில் உள்ள கணவன் வீட்டுக்கு வந்தார். நாளடைவில் ஷைஜா மீசை வளர்ப்பதற்கு வரவேற்பு அதிகரித்து விட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement