சிறையில் அவதி ‘ஓவர் குண்டு’ சித்துவுக்கு மூட்டு வலி

பாட்டியாலா: பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, 34 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் சமீபத்தில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கைது செயயப்பட்டு பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் பல்வேறு  உடல் நல பாதிப்பால் அவமதிப்பட்டு வருகிறார். இருப்பினும், அவருக்கு மருத்துவம் சார்ந்த சிறப்பு உணவு வகைகளை தவிர, வேறு எந்த சிறப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சித்துவுக்கு முழங்கால் மூட்டு வலி அதிகரித்துள்ளது. சிறையில் வெறும் தரையில் படுக்கும் அவர், எழுந்து நிற்க பெரிதும் சிரமப்படுகிறார். இந்நிலையில், எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சித்துவை பரிசோதனை செய்தனர். அப்போது மருத்துவர்கள், சித்து பெட்டில் படுக்க வேண்டும் எனவும், உடல் எடையை குறைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவரின் பரிந்துரையை தொடர்ந்து, சித்துவுக்கு பெட் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.