'விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் நிறைய இருக்கிறது' – சபாநாயகரிடம் வலியுறுத்திய எதிர்கட்சிகள்

பணவீக்கம், அக்னிபத் திட்டம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்த விவாதத்தை மக்களவையில் நடத்த வேண்டுமென குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில் பல்வேறு முக்கியமான மசோதாக்களை கொண்டு வர அரசு திட்டமிட்டிருக்கிறது ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சில குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு தடை உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட தயாராகி வரும் நிலையில் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற மக்களவை குழு தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் ஆனது நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
image
காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரஞ்சன் சவுதிரி, திமுகவிலிருந்து டி ஆர் பாலு, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து மிதுன் ரெட்டி, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அர்ஜுன் ராம் மெக்குவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.ஒவ்வொரு கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவும் அனைத்து கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஆலோசனை நடத்துவது வழக்கமான ஒன்று.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி நிறைவடையும். நாட்டின் நலன் கருதி தற்போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
பணவீக்கம், அக்னிபத் திட்டம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.