ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கப்பாதை ஒன்றில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தில் சிக்கிய உதவி ஆட்சியரின் காரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஸ்ரீ கங்காநகர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்று வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
இதனை அறியாமல் அவ்வழியாக சென்ற உதவி ஆட்சியரின் கார் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனை அறிந்த பொதுமக்கள் விரைந்து சென்று அந்த காரை சுரங்கப்பாதையில் இருந்து பத்திரமாக மீட்டனர்.