சர்வதேச சந்தையில் பல்வேறு காரணத்திற்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியும், அதன் விலையும் சந்தையின் வளர்ச்சிக்கு நேர் எதிராகவே இருந்தது.
இதன் வாயிலாக ஏப்ரல் மாதம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை தாண்டி பல மாதங்களுக்குப் பின்பு மீண்டும் 100 டாலருக்குக் கீழ் சரிந்துள்ளது. சீனா-வின் உற்பத்தி சந்தை இன்னும் கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கும் காரணத்தாலும், ஐரோப்பா முதல் அமெரிக்கா வரையில் பொருளாதார மந்த நிலை அச்சம் அதிகமாக இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்து வருகிறது.
இதனால் கச்சா எண்ணெய் விலையும் குறையத் துவங்கியுள்ளது. இதேவேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சவுதி அரேபியா பயணம் முக்கியப் பங்கு வகிப்பது மட்டும் அல்லாமல் சந்தையில் டிமாண்ட் குறைவாக இருக்கும் போது அதிகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.
மோடி அரசு அறிவிப்பால் கச்சா எண்ணெய், சர்க்கரை நிறுவனங்கள் கொண்டாட்டம்.. ஏன் தெரியுமா..?
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் 16ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது ஆக்ஸ்ட் மாத கான்டிராக்ட் விலையில் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 97.59 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 101.16 டாலராகவும் உள்ளது. இதேபோல் இந்திய பேஸக்ட் கச்சா எண்ணெய் விலை பல மாதங்களுக்குப் பின்பு 99.76 டாலராகக் குறைந்துள்ளது.
இந்திய பேஸ்கட் விலை
இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை கடைசியாக ஏப்ரல் 25ஆம் தேதி ஒரு பேரல் விலை 99.17 டாலராக இருந்தது. ரெசிஷன் அச்சத்தால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரத்தில் 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் பைடன் சந்திப்பிற்கு பின் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாலர் ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவை சந்தித்து இருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் மொத்த பலன்களை இந்தியாவும், இந்திய மக்களும் பெற முடியாது.
மத்திய அரசு
மத்திய அரசு மே 21 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரியை 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்த போது இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 109.55 ரூபாய், இதேபோல் மே 12 ஆம் தேதியன்று ரூபாய் மதிப்பு 73-74 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் ரூபாய் மதிப்பு 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பணவீக்கம், வளர்ச்சி
ஏற்கனவே ரிசர்வ் வங்கி பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளது, இதற்கிடையில் மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. அதேவேளயில் மத்திய அரசு சர்வதேச பொருளாதார மந்த நிலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.
பெட்ரோல் விலை
- டெல்லி – 96.72 ரூபாய்
- கொல்கத்தா – 106.03 ரூபாய்
- மும்பை – 106.31 ரூபாய்
- சென்னை – 102.63 ரூபாய்
- குர்கான் – 96.84 ரூபாய்
- நொய்டா – 97 ரூபாய்
- பெங்களூர் – 101.94 ரூபாய்
- புவனேஸ்வர் – 103.19 ரூபாய்
- சண்டிகர் – 96.2 ரூபாய்
- ஹைதராபாத் – 109.66 ரூபாய்
- ஜெய்ப்பூர் – 108.1 ரூபாய்
- லக்னோ – 96.44 ரூபாய்
- பாட்னா – 107.24 ரூபாய்
- திருவனந்தபுரம் – 107.71 ரூபாய்
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை
- அரியலூர் – 103.88 ரூபாய்
- செங்கல்பட்டு – 103.3 ரூபாய்
- சென்னை – 102.63 ரூபாய்
- கோயம்புத்தூர் – 103.15 ரூபாய்
- கடலூர் – 105.01 ரூபாய்
- தருமபுரி – 103.8 ரூபாய்
- திண்டுக்கல் – 103.38 ரூபாய்
- ஈரோடு – 103.17 ரூபாய்
- கள்ளக்குறிச்சி – 104.64 ரூபாய்
- காஞ்சிபுரம் – 102.88 ரூபாய்
- கன்னியாகுமரி – 103.87 ரூபாய்
- கரூர் – 103.05 ரூபாய்
- கிருஷ்ணகிரி – 104.61 ரூபாய்
- மதுரை – 103.28 ரூபாய்
- நாகப்பட்டினம் – 104.08 ரூபாய்
- நாமக்கல் – 103.27 ரூபாய்
- நீலகிரி – 104.92 ரூபாய்
- பெரம்பலூர் – 103.54 ரூபாய்
- புதுக்கோட்டை – 103.49 ரூபாய்
- ராமநாதபுரம் – 104.59 ரூபாய்
- ரானிபேட்டை – 103.72 ரூபாய்
- சேலம் – 103.74 ரூபாய்
- சிவகங்கை – 103.22 ரூபாய்
- தேனி – 103.65 ரூபாய்
- தென்காசி – 103.3 ரூபாய்
- தஞ்சாவூர் – 103.61 ரூபாய்
- திருவாரூர் – 103.89 ரூபாய்
- திருச்சிராப்பள்ளி – 103.4 ரூபாய்
- திருநெல்வேலி – 102.94 ரூபாய்
- திருப்பத்தூர் – 104.4 ரூபாய்
- திருப்பூர் – 103.49 ரூபாய்
- திருவள்ளூர் – 102.73 ரூபாய்
- திருவண்ணாமலை – 104.44 ரூபாய்
- தூத்துக்குடி – 103.38 ரூபாய்
- வேலூர் – 103.95 ரூபாய்
- விழுப்புரம் – 104.17 ரூபாய்
- விருதுநகர் – 103.38 ரூபாய்
டீசல் விலை
- டெல்லி – 89.62 ரூபாய்
- கொல்கத்தா – 92.76 ரூபாய்
- மும்பை – 94.27 ரூபாய்
- சென்னை – 94.24 ரூபாய்
- குர்கான் – 89.72 ரூபாய்
- நொய்டா – 90.14 ரூபாய்
- பெங்களூர் – 87.89 ரூபாய்
- புவனேஸ்வர் – 94.76 ரூபாய்
- சண்டிகர் – 84.26 ரூபாய்
- ஹைதராபாத் – 97.82 ரூபாய்
- ஜெய்ப்பூர் – 93.38 ரூபாய்
- லக்னோ – 89.64 ரூபாய்
- பாட்னா – 94.04 ரூபாய்
- திருவனந்தபுரம் – 96.52 ரூபாய்
தமிழ்நாட்டில் டீசல் விலை
- அரியலூர் – 95.49 ரூபாய்
- செங்கல்பட்டு – 94.88 ரூபாய்
- சென்னை – 94.24 ரூபாய்
- கோயம்புத்தூர் – 94.77 ரூபாய்
- கடலூர் – 96.56 ரூபாய்
- தருமபுரி – 95.4 ரூபாய்
- திண்டுக்கல் – 95.01 ரூபாய்
- ஈரோடு – 94.79 ரூபாய்
- கள்ளகுறிச்சி – 96.2 ரூபாய்
- காஞ்சிபுரம் – 94.48 ரூபாய்
- கன்னியாகுமரி – 95.5 ரூபாய்
- கரூர் – 94.68 ரூபாய்
- கிருஷ்ணகிரி – 96.19 ரூபாய்
- மதுரை – 94.91 ரூபாய்
- நாகப்பட்டினம் – 95.69 ரூபாய்
- நாமக்கல் – 94.88 ரூபாய்
- நீலகிரி – 96.32 ரூபாய்
- பெரம்பலூர் – 95.16 ரூபாய்
- புதுக்கோட்டை – 95.11 ரூபாய்
- ராமநாதபுரம் – 96.19 ரூபாய்
- ராணிபேட்டை – 95.3 ரூபாய்
- சேலம் – 95.35 ரூபாய்
- சிவகங்கை – 94.86 ரூபாய்
- தேனி – 95.27 ரூபாய்
- தென்காசி – 94.95 ரூபாய்
- தஞ்சாவூர் – 95.23 ரூபாய்
- திருவாரூர் – 95.5 ரூபாய்
- திருச்சிராப்பள்ளி – 95.02 ரூபாய்
- திருநெல்வேலி – 94.6 ரூபாய்
- திருப்பத்தூர் – 95.96 ரூபாய்
- திருப்பூர் – 95.1 ரூபாய்
- திருவள்ளூர் – 94.33 ரூபாய்
- திருவண்ணாமலை – 96 ரூபாய்
- தூத்துக்குடி – 95.02 ரூபாய்
- வேலூர் – 95.52 ரூபாய்
- விழுப்புரம் – 95.73 ரூபாய்
- விருதுநகர் – 95.01 ரூபாய்
Modi Govt Petrol, diesel may cut amid Indian basket crude oil falls below 100 USD
Modi Govt Petrol, diesel may cut amid Indian basket crude oil falls below 100 USD கச்சா எண்ணெய் 100 டாலர் கீழ் வந்தாச்சு.. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அதிக வாய்ப்பு..!