ஸ்விக்கி , சோமேட்டோவ விடுங்க.. டெலிவரி மேன்களோட உண்மையான பிரண்ட்ஷிப்ப பாருங்க..!

ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனங்கள் இரண்டும் ஆன்லைன் ஆப் மூலமான உணவு டெலிவரி செய்யும் போட்டி நிறுவனங்களாகும்.

ஆனால் நிறுவனங்கள் போட்டி போட்டால் என்ன? நாங்கள் எங்களது வேலையை சரியாக செய்வோம் என இந்த இரு நிறுவனங்களை சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் இருவர் செய்த சமபவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

பொதுவாக நம்மூர் ரோடுகளிலும் இதுபோன்ற உதவிகளையும், நண்பர்களையும் பார்த்திருக்க முடியும்.

ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு.. குதிரையில் டெலிவரி செய்த ஸ்விக்கி நபர் யார் தெரியுமா?

ஸ்விக்கி சோமேட்டோ ஊழியர்கள்

ஸ்விக்கி சோமேட்டோ ஊழியர்கள்

ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் தனது உணவு டெலிவரியினை தனது இருசக்கர வாகனத்தில் டெலிவரி செய்ய செல்வதும், சோமேட்டோ டெலிவரி மேன் தனது சைக்கிளில் டெலிவரி செய்ய செல்வதையும் பார்க்க முடிகிறது. ஸ்விக்கி டெலிவரி மேன், சோமேட்டோ டெலிவரி பேக்கினை வைத்திருப்பவரை தனது கையில் பிடித்துக் கொண்டு வேகமாக கூட்டி செல்வதை பார்க்க முடிகிறது.

தவித்தவருக்கு உதவி

தவித்தவருக்கு உதவி

இதனை சன்ன அரோரா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிறுவனங்கள் ஒரே வணிகத்தில் ஈடுபடும் போட்டி நிறுவனங்களாக இருந்தாலும், தங்களது நட்பின் ஆழம் பெரிது என்பது போல காட்டுகின்றது.

டெல்லியின் கடும் வெயிலில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சோமேட்டோ டெலிவரி மேனுக்கு, ஸ்விக்கி ஊழியர் உதவி செய்திருப்பது பாராட்டினை பெற்றுள்ளது.

 வேலையால் பிரிக்கப்பட்டாலும்- நட்பால் இணைப்பு
 

வேலையால் பிரிக்கப்பட்டாலும்- நட்பால் இணைப்பு

3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து லைக் செய்துள்ளனர். பலர் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். வேலையால் பிரிக்கப்பட்டிருந்தாலும், இவ்விருவர்களும் மனித நேயத்தால் ஒன்றுபட்டுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். இதே மற்றொருவர், இது தான் என்றுமே உலகத்திற்கு வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

மனித நேயத்தால் இணைப்பு

மனித நேயத்தால் இணைப்பு

சமீபத்தில் ஸ்விக்கி டெலிவரியை குதிரையில் சென்று டெலிவரி செய்ததாக பகிரப்பட்ட வீடியோ ஒன்று, அதன் பிறகு டெலிவரி மேனின் நண்பர் அவரது பேக்கினை எடுத்து சென்று திரும்ப கொடுக்காமல் பயன்படுத்தி வந்ததாக ஸ்விக்கியால் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படி ஒரு பதிவு சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

எப்படியிருப்பினும் உண்மை நிலவரம் என்ன என்று தெரியாவிட்டாலும், இவர்கள் நிறுவனங்களால் வேறுபட்டிருந்தாலும், மனித நேயத்தால் ஒன்று பட்டுள்ளதை மறுக்க முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Swiggy agent on motorcycle pulls along a zomato agent Riding a bicycle to speed him up

Swiggy agent on motorcycle pulls along a zomato agent Riding a bicycle to speed him up/ஸ்விக்கி , சோமேட்டோவ விடுங்க.. டெலிவரி மேன்களோட உண்மையான பிரண்ட்ஷிப்ப பாருங்க..!

Story first published: Sunday, July 17, 2022, 12:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.