டெல்லி: பரப்பரபான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. அக்னிபாதை திட்டம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு நிலை பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபடுவோர்களின் வீடுகள் இடிக்கபடுவது, அக்னி பாத் திட்டம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் நாடளுமன்ற கூட்டத்தொடரில் விவாதங்கள் அணல் பறக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. நாடாளுமன்றத்தில் பேசப்படும் போது ஊழல், சர்வதிகாரம், கிரிமினல் நாடகம், வெட்கக்கேடு உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வனப்பாதுகாப்பு திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆனையம் மசோதா, ஒன்றிய பல்கலைகழகங்கள் திருத்த மசோதா, ஆள் கடத்தல் மசோதா ஆகியவை 24 மசோதாக்களில் இடம் பெற்றுள்ளன. மேலும் குடும்ப நீதிமன்றங்கள் மசோதா, மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, திவால் மற்றும் திவால் சட்ட திறுத்த மசோதா , பதிவு மற்றும் பாதுகாப்பு தெரிவித்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.