சீனா மீது ஊசலாடும் கத்தி.. கழுத்தை நெறிக்கும் பிரச்சனை..!

சீனா நீண்ட காலமாக ஏழை நாடுகளையும், அதிகப் பணப் பலம் இல்லாத நாடுகளுக்கு ஆசை காட்டி பெரிய கட்டுமான திட்டம், போக்குவரத்துத் திட்டத்தைக் கட்டித் தருவதாகக் கூறி கடன் வலையில் சிக்க வைத்து வருவது அனைவருக்கும் தெரியும்.

இதில் இலங்கை, பாகிஸ்தான், நேப்பாள், ஆப்பிரிக்காவில் பல நாடுகள், சமீபத்தில் பங்களாதேஷ் மிகப்பெரிய மற்றும் முக்கியமான திட்டத்திற்கு 4 சீன அரசு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது. ஆனால் தற்போது சீனாவின் நிலைமையே படுமோசமாக உள்ளது என்றால் மிகையில்லை..

அதிலும் குறிப்பாகக் கடந்த 2 வாரத்தில் சீன நிதிநிலையை மொத்தமாகச் சீர்குலைக்கும் வகையில் இரண்டு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு உள்ளது. இதைச் சீனாவுக்குத் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சீனா பொருளாதாரத்தின் நிலைமையைப் பாத்தீங்களா.. அட பாவமே..!

சீனா

சீனா

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பல சிறிய வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தங்களது பணத்தைத் திருப்பி அளிக்க முடியாமல் தோல்வியடைந்ததால் சீன வங்கிகள் மோசமான நிலையை எதிர்கொண்டு உள்ளது.

ஹெனான் மாகாணம்

ஹெனான் மாகாணம்

ஹெனான் மாகாணங்களில் இருக்கும் வங்கிகளில் சுமார் 40 பில்லியன் யுவான் ( அதாவது 6 பில்லியன் டாலர்கள்) சொத்துக்கள் மற்றும் சுமார் 400,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வங்கிகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர்.

சிறிய அளவு
 

சிறிய அளவு

தற்போது சீனாவில் மூடப்பட்ட வங்கிகள் அல்லது மக்களின் பணத்தை முடக்கியுள்ள வங்கி எண்ணிக்கை சீனாவின் நிதிய அமைப்பில் சிறிய அளவு தான் எனப் பேராசிரியர் Minxin Pei தெரிவித்துள்ளார். வங்கிகள் முடங்கியதற்கு மோசமான மேற்பார்வை மற்றும் ஊழல் நிறைந்த நிதி நிறுவனங்கள் தான் காரணம்.

6 வங்கிகள் முடக்கம்

6 வங்கிகள் முடக்கம்

சீனாவில் ஹெனான் மற்றும் அன்ஹுய் மாகாணங்களில் உள்ள ஆறு வங்கிகள் வைப்பு நிதிகள்.

– Yuzhou Xinminsheng கிராம வங்கி (ஹெனான் மாகாணத்தின் Xuchang நகரில் அமைந்துள்ளது)

– Zhecheng Huanghuai வங்கி (ஷாங்கி நகரம், ஹெனான் மாகாணம்)

– ஷாங்காய் ஹூமின் கிராமப்புற வங்கி (ஜுமாடியன் நகரம், ஹெனான் மாகாணம்)

– நியூ ஓரியண்டல் கிராம வங்கி (கைஃபெங் நகரம், ஹெனான் மாகாணம்)

– Huaihe நதி கிராமக் கரை (Bengbu City, Anhui மாகாணம்)

– Yixian கவுண்டி கிராம வங்கி (Huangshan நகரம், Anhui மாகாணம்).

 

இன்சூரன்ஸ் பாதுகாப்பு

இன்சூரன்ஸ் பாதுகாப்பு

பொதுவாகச் சீனாவில் எந்த வங்கியாகவும் இருந்தாலும் 5,00,000 யூவான்-க்கு நிகரான வைப்பு நிதிக்கு அரசும், அந்நாட்டு மத்திய வங்கியும் பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் தற்போது இன்சூரன்ஸ் தீட்டத்தின் கீழ் பணம் அளிக்கப்படவில்லை எனச் செய்திகள் வெளியாகிறது.

சிறு நகர வங்கிகள்

சிறு நகர வங்கிகள்

சீனாவின் சிறு நகரங்களில் இருக்கும் வங்கிகள் பல பெரிய அளவிலான நிதி சேவைகளை அளிக்காவிட்டாலும், டெப்பாசிட் சேவைகளை அளிக்கிறது. குறிப்பாக Duxiaoman Financial என்ற வங்கி வைப்பு நிதி சேவை மட்டுமே அளிக்கிறது.

ஆன்லைன் பணப் பரிமாற்றம்

ஆன்லைன் பணப் பரிமாற்றம்

மேலும் பெரிய நகரங்களில் இருந்து பணத்தை ஈர்ப்பதற்காக அதிக வட்டி வருமானத்தை அளிப்பதாக அறிவித்து ஆன்லைன் மூலம் டெப்பாசிட் பெறும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது. இதனால் பெய்ஜிங் நகரத்தில் இருக்கும் மக்கள் கூட ஹெனான் மாகாணத்தில் உள்ள சிறிய வங்கிகளில் பணத்தை டெப்பாசிட் செய்து வந்துள்ளனர்.

ஊழல்

ஊழல்

ஆனால் இந்த வங்கிகளின் மோசமான மேற்பார்வை மற்றும் ஊழல் நிறைந்த நிதி நிர்வாகம் போன்றவற்றால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உரிய வட்டியில் பணத்தை அளிக்க முடியாமல் போனது. இதுபோல் சீனா முழுவதும் பல கிராம வங்கிகள் உள்ளது.

பைடூ, டென்சென்ட்

பைடூ, டென்சென்ட்

மேலும் பைடூ, டென்சென்ட் போன்ற பல டெக் நிறுவனங்கள் இந்த வங்கிகளுக்கு நிதி திரட்டுவதற்கான நிதி பரிமாற்ற சேவையை அளித்து வருகிறது. இதற்கிடையில் தற்போது சீனா மக்கள் People’s Bank of China (PBOC)-ஐ எதிர்த்துப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சீனாவின் கழுத்தை அறுக்கலாம்

சீனாவின் கழுத்தை அறுக்கலாம்

2009 முதல் சீனாவின் அதிகப்படியான கடன் சேவைகள் இந்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது, ஆனால் இதனால் தொடர்ந்து நிலைநாட்ட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.சீனாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் குறைந்துள்ள வேளையில் இந்நாட்டின் debt-to-GDP ratio 264 சதவீதமாக உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் சீனாவின் கழுத்தை அறுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China’s debt bomb looks ready to explode amid Henan bank crisis exploded

China’s debt bomb looks ready to explode amid Henan bank crisis exploded சீன மீது ஊசலாடும் கத்தி.. கழுத்தை நெறிக்கும் பிரச்சனை..!

Story first published: Sunday, July 17, 2022, 12:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.