வீடு என்பது நம்மில் பலருக்கும் வாழ் நாள் கனவாகவே இருக்கும். குறிப்பாக சின்ன சின்ன வேலைகளை பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என நினைப்போம். அப்படி 50 லட்சம் ரூபாயில் பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்ட வீட்டினை கேரள தொழிலதிபர் கட்டிய வீட்டினை பற்றி தான் பார்க்க முடிகிறது.
கேரளாவைச் சேர்ந்த மனோஜ் மேத்யூ., மறுசுழற்சி செய்யப்பட்ட மரம், பாரம்பரிய கலை நயம், நவீன வடிவமைப்பு என பலவற்றையும் கலந்து, பாரம்பரியம் மிக்க நவீன ஆடம்பர மாளிகையை உருவாக்கியுள்ளார்.
அம்மாடியோ.. ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.. அப்படி என்ன ஸ்பெஷல்!
மனதை ஏங்க வைக்கும் வீடு
இது பார்க்கவே மனதிற்கு இதமான ஒரு உணர்வினை தருகின்றது. மனதினை ஏங்க வைக்கிறது எனலாம். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் ஆஃப்செட் பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வரும் மனோஜ் மேத்டூ, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வாடகை வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக இருந்தவர் என்பதால் சொந்த வீட்டின் மகிமை என்ன என்பது அவருக்கு தெரிந்து இருக்கிறது.
பார்த்து பார்த்து கட்டிய வீடு
இதனால் தானோ என்னவோ வீட்டில் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். இப்படி கனவுகளும், ஆசையும் கலந்து கட்டப்பட்ட இந்த வீட்டினை கடந்த ஆண்டு கட்டி முடித்துள்ளார். குறைந்த செலவில் பாரம்பரியத்தையும் விடாமல், தனித்துவமான வீட்டினை கட்டி முடித்துள்ளார்.
வாடகை வீடுதான்
இது குறித்து மனோஜ் நான் பெரும்பாலும் வாடகை வீட்டிலேயே தங்கியிருந்தேன். சொல்லப்போனால் எனது சொந்த வீட்டிற்கு வரும் முன்பு வரை வாடகை வீட்டில் தான் குடும்பத்துடன் வசித்து வந்தோம். ஆக எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் உறுதியாக திட்டமிட்டிருந்தேன். எங்களுக்கு ஏற்றவாறு செலவும் குறைவாக ஒரு வீட்டினை கட்ட திட்டமிட்டேன்
வடிவமைப்பாளர்
COSTFORD கோட்டையைச் சேர்ந்த பொறியாளர் பிஜு பி ஜான் மற்றும் கட்டிட கலைஞர் ரெஞ்சு ஆகியோர் இந்த வீட்டினை கட்டிக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர். மனோஜின் கோரிக்கைகளை ஏற்று அதற்கேற்ப வடிவமைத்துக் கொண்டுள்ளனர். 2020ல் தொடங்கப்பட்ட வீடு, கொரோனா காரணமாக சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு வருட காலம் ஆனதாகவும் மனோஜ் கூறுகின்றார்.
சுற்றுசூழலுக்கு ஏற்ற வீடு
2750 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சுற்றுசூழலுக்கு உகந்த இந்த வீடு, கோட்டக்குபுரத்தில், கனக்கிரி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான பொருட்கள் உள்நாட்டில் இருந்தே பெறப்பட்டது. சுற்று சூழலுக்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்தினோம். ஏற்கனவே பயன்படுத்திய பழைய பொருட்களையும் செலவினையும் குறைத்தோம்.
பழமையான பொருட்களை எடுத்து கொண்டோம்
ஒரு பாரம்பரிய வீடு தேவைப்பட்டதால், ஜன்னல்கள், கதவுகள், கூரைகள் மற்றும் மாடிகள் போன்ற அனைத்திற்கும் நிறைய மரங்கள் தேவைப்பட்டன. சுற்றுசூழலுக்கு உகந்த மற்றும் செலவு குறைப்பதை நோக்கமாகக் கொண்டதால், பழைய கட்டிடங்களில் இருந்தும் பல பொருட்களை எடுத்துக் கொண்டோம். வீட்டில் பயன்படுத்தப்பட்ட மரத்தில் 80% அதிகமானவை மறுசுழற்சி செய்யப்பட்ட மரமாகும்.
பழைய ஒடுகள்
மரங்கள் பயன்படுத்தியது ஒரு பாரம்பரிய உணர்வினை கொடுகின்றது. மரங்கள் மட்டும் அல்ல, பழைய வீட்டில் பயன்படுத்தப்பட்ட மங்களூர் வீடுகள் மேற்கூரைக்கு பயன்படுத்தியுள்ளனர். அதனை சுத்தம் செய்து பயன்படுத்திக் கொண்டோம். அதற்கு பெயிண்ட் கூட அடிக்கவில்லை, பழமையின் அழகை அப்படியே பயன்படுத்திக் கொண்டோம்.
எவ்வளவு செலவு
50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வீடானது, ஏசி வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை, வாடகை வீட்டில் கூட ஏசியினை பயன்படுத்தினோம். ஆனால் இங்கு வெப்பம் குறைவாக குளுமையாகவே உள்ளது. வெறும் பேன் மட்டுமே பயன்படுத்துகிறோம். அதுவும் சில நேரங்களில் தான். அதோடு நான் முன்பு இருந்ததை வீட, இந்த வீட்டில் இயற்கையுடன் ஒன்றி வாழ்வதாக தோன்றுகின்றது என மனோஜ் கூறுகின்றார்.
பயோகேஸ் திட்டம்
அதோடு எல்பிஜி கேஸினை குறைப்பதற்காக, பயோகேஸ் திட்டத்தினையும் திட்டமிட்டுள்ளோம். இது இன்னும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வீட்டில் நான் எனது மனைவி இரு குழந்தைகள் மற்றும் அப்பா அம்மாவுடன் வசித்து வருகின்றோம் என கூறும் மனோஜ், இயற்கையோடு ஒன்றினைந்து வாழ இந்த வீடு நிச்சயம் முக்கிய பங்களிக்கும்.
Recycle old materials and build such a beautiful house for Rs 50 lakh?
Recycle old materials and build such a beautiful house for Rs 50 lakh?/ரூ.50 லட்சத்தில் இப்படியொரு பிரமிக்க வைக்கும் வீடா.. எவ்வளவு அழகு.. அசத்திய கேரள தொழிலதிபர்!