தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் போதும், எதையும் சாதிக்கும் பலம் வரும் என்பது ஒரு கையை இழந்த மிதேஷ் குப்தா என்பவரின் செயல் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.
பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்பதற்கு பதில், இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என நினைக்கும் வேளையில் இருப்பதை கொண்டு வாழ்ந்து காட்டி சாதனை படைப்போம் என்ற கோட்பாட்டை உறுதியாக கொண்டு தனது நாட்களை கடத்தி வருகிறார் மிதேஷ் குப்தா என்ற நபர்.
யார் இந்த மிதேஷ் குப்தா? என்பதை காணலாம்.
மனதை கவரும் செயல்கள் எப்போதும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கத் தவறாது. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த மிதேஷ் குப்தா என்ற ஒரு கையை இழந்த நபர் ஒருவர், ஒற்றையாளாக தன்னுடைய தள்ளுவண்டி கடையை நடத்தி வருகிறார்.
Jazba hona Chahiye
Mitesh Gupta runs a Pav Bhaji stall in Malad, Mumbai. Let’s do our bit pic.twitter.com/58DKfrVrDl
— Gurmeet Chadha (@connectgurmeet) July 16, 2022
அது தொடர்பான வீடியோ ஒன்றை Gurmeet Chadha என்ற நபர் தனது ட்விட்டரில் பகிர்ந்து, “இதனை செய்ய பேரார்வம் வேண்டும்.
மும்பையின் மலாட் பகுதியில் மிதேஷ் குப்தா பாவ் பாஜி கடை நடத்தி வருகிறார். நாம் நம்முடைய வேலையை செய்வோம்” எனக் குறிப்பிட்டு, மிதேஷ் குப்தாவிற்கு உதவும் வகையில் அவரது கடையில் சென்று சாட் வகைகளை சாப்பிடுவோம் என்ற பாணியில் குர்மீத் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த வீடியோ கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. பலரும் அதனை பகிர்ந்து, மிதேஷின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். மேலும் மிதேஷின் இந்த செயல் பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது எனவும் பதிவிட்டிருக்கிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM