"சிறுவர்கள் பார்க்க சிறந்த படங்கள் இதோ" – பட்டியலை அடுக்கும் இயக்குநர் விஜய் மில்டன்

“அரசுப் பள்ளிகளில் இனி மாதம்தோறும் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும்” என்ற தமிழக அரசின் அறிவிப்பு சமூக செயற்பாட்டாளர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. தனது திரைப்படங்கள் மூலம் சாலையோரத்தில் வசிக்கும் குழந்தைகள், சிறுவர்களின் உளவியலைக் பாசாங்கற்றுக் காட்டிய இயக்குநர் விஜய் மில்டனை தொடர்புகொண்டு, “மாணவர்கள் பார்க்க நீங்கள் பரிந்துரைக்கும் படங்களை பட்டியலிட முடியுமா” என்று கேட்டோம். துள்ளிக்குதிக்கும் சிறுவர்களின் குதூகலத்துடன் லிஸ்ட்டைப் பகிர்ந்துகொண்டார்.

toy story

”நாம சும்மா விளையாடிட்டு தூக்கிப்போடுற பொம்மைகளுக்கும் உயிர் இருக்கு. தூக்கிப்போட்டதும், அந்தப் பொம்மைகள் என்ன நினைக்கும் என்பதுதான் ‘டாய் ஸ்டோரி’யின் கதை. இந்தப் படத்தைப் பார்த்தால், மாணவர்கள் தங்களோட கண்ணோட்டத்துலேயே உலகத்தைப் பார்த்து பழகிக்காமல், சுயநலமாக வளராமல் இருப்பார்கள். உபயோகமே இல்லாத பொருளின் பக்கம் இருந்துக்கூட யோசிப்பார்கள். நிறையக் கற்றுக்கொள்வார்கள்”.

‘white balloon’ and children of heaven

“நாம் கஷ்டப்பட்டு வளர்ந்தாலும் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்று நினைப்பவர்கள் பெற்றோர்கள். ஆனால், பெற்றோர்கள் வாங்கிக்கொடுக்கும் பொருட்களின் மதிப்பு குழந்தைகளுக்கு தெரிவதில்லை. இந்த இரண்டுப் படங்களையும் பார்த்தால் நாம் எந்தளவுக்கு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். ஒருவருக்கு ஆடம்பரமாக இருக்கும் பொருள் மற்றொருவருக்கு அத்யாவசியமாக இருக்கும் என்ற வித்தியாசங்களை உணர்வார்கள்”.

children of heaven

the pursuit of happiness

“சிறுவயதில் அப்பா அம்மாவே உலகம் என்று நினைக்கும் குழந்தைகள், 13 வயதாகும்போது கொஞ்சம் விலகி நிற்பார்கள். அதுக்கப்புறம், அவங்களுக்கு பெற்றோர்கள் எப்போ பிடிக்கும்னா, அவங்க ஃப்ரண்ட்ஸ் ஆகும்போதுதான். ஆனால், இந்தப் படம் பார்த்தால் எப்பவும் அப்பாவை விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்”.

taare zameen par

“இன்னமும் நம் கல்விமுறை ரேங்க்கிங் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. படிப்பைத்தாண்டி, விளையாட்டு, இசை, கலை போன்றவற்றில் சாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது. அதனை தேடவைப்பதாகத்தான் நம் கல்விமுறை இருக்கவேண்டும். இந்தப் படம் பார்த்தாங்கன்னா, தங்களுக்குள் இருக்கும் திறமையை உணர்ந்துகொள்வார்கள்”.

where is my friends home

“அடுத்தவர்களின் வலியையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் படம் சொல்லும் செய்தி. சிறுவன் ஒருவன் தனது நண்பனின் நோட்டை எடுத்து வந்துவிடுவான். அதை கொண்டுப்போய் கொடுக்க சிறுவன் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால், “இது ரொம்பத் தப்பு. நாளைக்கு அவன் வந்து அடிவாங்குவான்ல” எனறு நோட்டை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பிப்பான் சிறுவன். குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கரிசனமும் அடுத்தவர் வலியைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் அதிகமாகும்”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.