கோலாலம்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இன்று (ஜூலை 17) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சிங்கப்பூரில் ‘சூப்பர் 500’ சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி இடையே கடும் போட்டி நிலவியது. துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்திருந்த சிந்து பின்னர் அதிரடி காட்டி, 11-2 என முன்னிலை வகித்தார். முதல் செட்டை 21-9 என கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 11-21 என கோட்டை விட்டார். இதனால் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் இருவரும் கவனமாக விளையாடினர். சீன வீராங்கனை வாங் ஜி யி கடும் சவால் கொடுத்தாலும், 21-15 என சிந்து தன் வசப்படுத்தினார். இதன்மூலம் 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கோலாலம்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இன்று (ஜூலை 17) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.சிங்கப்பூரில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்