தங்க டாலர் விற்பனை… ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

2 கிராம் டாலர் 10,000 ரூபாய், 5 கிராம் டாலர் 25 ஆயிரம் மற்றும் 10 கிராம் டாலர் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்து வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக 2 மற்றும் 5 கிராம் தங்க டாலர்கள் விற்பனை நிறுத்தப்பட்டு, 10 கிராம் எடையுள்ள சாமி டாலர்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

விலை அதிகம் காரணமாக ஏழுமலையானை தரிசிக்கவரும் சாமானிய பக்தர்கள் 10 கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களை வாங்க முடியாமல் நிவை இருந்து வந்தது. இதன் விளைவாக 10 கிராம் தங்க டாலர்கள் ஒரு நாளைக்கு மிகவும் சொற்ப அளவிலேயே விற்பனையாகி வந்தது.

இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திடம் முறையிட்டு வந்தனர். பக்தர்களின் முறையீட்டை பரிசீலனை செய்த திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீண்டும் 2, 5 கிராம் தங்க சாமி டாலர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒருபுறம் ஏழுமலையான் உருவமும், மறுபுறம் திருப்பதி கோயில் தங்க கோபுரமும் பதிக்கப்பட்ட சாமி டாலரை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால், தங்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.