இல்லதரசிகளுக்கு குட் நியூஸ்.. பாமாயில் விலை விலை குறையலாம்.. ஏன் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளரான இந்தோனேஷியா, அதன் ஏற்றுமதி வரியை நீக்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையில், ஆகஸ்ட் 31 வரையில் இந்தோனேஷியா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியினை ரத்து செய்துள்ளது.

இதனால் பாமாயில் மீதான வரி விகிதம் இருக்காது. இது இந்திய போன்ற அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில், எண்ணெய் விலை குறைய காரணமாக அமையலாம்.

ரூ.50 லட்சத்தில் இப்படியொரு பிரமிக்க வைக்கும் வீடா.. எவ்வளவு அழகு.. அசத்திய கேரள தொழிலதிபர்!

பாதிப்பு இருக்காது?

பாதிப்பு இருக்காது?

இந்தோனேஷியா அரசு இந்த வரி குறைப்பினால் அரசுக்கு எந்த வருவாயும் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. உலகின் மிகபெரிய சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளரின் இந்த முடிவானது மிகப்பெரியளவில் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கைகொடுக்கலாம். இதனால் எண்ணெய் விலை மிக கடினமான இந்த காலக்கட்டத்தில் குறைவான விலைக்கு தள்ளப்படலாம்.

தடையால் பிரச்சனையா?

தடையால் பிரச்சனையா?

உள்நாட்டில் சப்ளையை அதிகரிக்க இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்த நிலையில், ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதன் காரணமாக உற்பத்தியாளார்கள் அதிகளவிலான் சரக்குகளுடன் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்றுமதியினை அதிகரிக்க இந்தோனேஷியா இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது.

இந்தியா இறக்குமதி எவ்வளவு?
 

இந்தியா இறக்குமதி எவ்வளவு?

இது இந்தோனேஷியவுக்கு ஏற்றுமதியினை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் டன் பாமாயிலை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஆக இந்தோனேஷியாவின் இந்த நடவடிக்கையானது நிச்சயம் இந்தியாவுக்கு பலன் கொடுக்கலாம்.

இல்லதரசிகளுக்கு குட் நியூஸ்

இல்லதரசிகளுக்கு குட் நியூஸ்

பாமாயில் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளரான இந்தோனேசிய, மூன்று வார தடைக்கு பிறகு தான், சமீபத்தில் அதன் தடையை நீக்கியது. இந்த நிலையில் அதன் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் விதமாக வரியையும் ரத்து செய்துள்ளது. இது மேற்கொண்டு விலையினை குறைக்க வழிவகுக்கலாம். இது இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ் எனலாம்.

இந்தியாவின் நிலை

இந்தியாவின் நிலை

ஏனெனில் இந்தியாவின் 60% சமையல் எண்ணெய் விகிதமானது இறக்குமதி மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக மொத்த பாமாயில் எண்ணெய் இறக்குமதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட அளவு 30% ஆகும். ஆக ஏற்கனவே உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா, விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தோனேஷியாவும் வரியை குறைத்துள்ளது விலையை குறைக்க வழிவகுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indonesia removes palm oil export duty until August 31: oil price may down

Indonesia removes palm oil export duty until August 31: oil price may down/இல்லதரசிகளுக்கு குட் நியூஸ்.. பாமாயில் விலை விலை குறையலாம்.. ஏன் தெரியுமா?

Story first published: Sunday, July 17, 2022, 18:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.