நடிகைகளை மட்டும் எளிதில் மாற்றிவிடுகின்றனர்: டாப்சி கோபம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை சம்பவங்களை வைத்து உருவான இந்தி படம், ‘சபாஷ் மிது’. டாப்சி நடிப்பில் வெளியான இதில், ஆண்கள் நிறைந்த கிரிக்கெட் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து சொல்லப்பட்டிருந்தது. மேலும், இப்படத்தில் இடம்பெறும் பாலின பாகுபாடு குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டி வருமாறு: திரையுலகில் பாலின பாகுபாடு மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஹீரோக்களுக்காக வருடக் கணக்கில் காத்திருப்பவர்கள், ஹீரோயின்களை மட்டும் நினைத்த நேரத்தில் மாற்றிவிடுகின்றனர். நடிகைகள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு மூலகாரணமே பெண்கள்தான். அவர்கள் எளிதில் மாறக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஆண்கள் மாற்றக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஒரு நடிகையை மாற்றுவது என்பது இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மிக எளிதாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். அதனால்தான் நான் நடிக்கும் இந்தி படங்களில் மிக கவனமாக பணிபுரிகிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.