பிரித்தானியாவில் 8.4 மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு தவணைகளாக அரசு நிதியுதவி ஒன்றை வழங்கத் துவங்கியுள்ளது.
ஜூலை 14 வியாழக்கிழமை முதல் குறித்த திட்டத்தின் முதல் தவணையான 326 பவுண்டுகள் வழங்கும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளன.
யுனிவர்சல் கிரெடிட் மற்றும் வேறு சில பலன்களை கோருபவர்களுக்கு அரசு செலுத்தும் இந்த 650 பவுண்டுகள் தொகையில் முதல் தவணையாக 326 பவுண்டுகள் அளிக்கப்படுகிறது.
ஆனால், அனைவரும் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது என்றே தெரிய வந்துள்ளது. பணம் வழங்குவதற்கு முன், உங்கள் சம்பளம் மற்றும் பிற வருமானங்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராயும் என்றே கூறப்படுகிறது.
மேலும், வருகை கொடுப்பனவு, கவனிப்பவருக்கான கொடுப்பனவு, சிறார்களுக்கான ஆதாயம், ஊனமுற்றோர் வாழ்க்கை கொடுப்பனவு, மகப்பேறு கொடுப்பனவு, அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்கள் உள்ளிட்ட 12 பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு இந்த நிதியுதவி மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பெரும்பாலான குடும்பங்களுக்கு இந்த நிதியுதவியால் பலன் பெற முடியும் என்றே கூறப்படுகிறது.
மேலும், குறித்த 650 பவுண்டுகள் கொடுப்பனவு திட்டமானது முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அறிவித்த 1,500 பவுண்டுகள் கொடுப்பனவு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.