வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்-நம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
சீனாவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வானிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் கடந்த வாரம் வரை 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த திடீர் மழையால், தென்மேற்கு மற்றும் வடமேற்கு சீனாவில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள லாங்னான் நகரில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுதும் நேற்று முன்தினம் வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. வீடுகளையும், உடைமைகளையும் இழந்த ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளம் காரணமாக போக்குவரத்து, உணவு, நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement