போட்டியே இல்லாமல் தேர்வான குடியரசுத் தலைவர் பெயர் தெரியுமா உங்களுக்கு? குட்டி ரீவைண்ட்!

இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்கள், அவற்றில் எத்தனை தேர்தல்களில் போட்டி நிலவியது, வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்பது பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட், இங்கே!
இந்திய குடியரசு தலைவரை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. அதேபோல் நாடாளுமன்ற நியமன எம்.பி.க்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. 
image
மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு மாறுபடுகிறது. இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பை கொண்டது உத்தரபிரதேசம். அங்கு ஒரு எம்எல்ஏவின் வாக்குமதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176. இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர் நீலம் சஞ்சீவ ரெட்டி.
image
அதுபோல இரண்டு முறை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே. நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்ற இவர் 1950 முதல் 1962-ம் ஆண்டு வரை பதவிக்காலம் வகித்தார். இவரைத் தொடர்ந்து அடுத்து சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 ஆம் ஆண்டு முதல் 1967 ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். இதையடுத்து ஜாகிர் உசேன் 1967 முதல் -1969 வரையும், வராஹகிரி வெங்கட கிரி 1969 மார்ச் முதல் 1974ஆம் ஆண்டு வரையும் வகித்தனர்.
image
அதனைத் தொடர்ந்து பக்ருதீன் அலி அகமது 1974 முதல் 1977 வரையும், நீலம் சஞ்சீவ ரெட்டி 1982 வரையும் குடியரசுத் தலைவர் பதவி விகித்தனர். இந்தியாவின் ஏழாவது குடியரசுத் தலைவராக கியானி ஜைல் சிங் 1982 முதல் 87 வரையும், ஆர்.வெங்கட்ராமன் 1987 முதல் 1992 வரையும், சங்கர் தயாள் சர்மா 1992 முதல் 1997 ஆண்டு வரையும் நாட்டின் முதல் குடிமகன் என்ற பதவியை வகித்தனர்.

1997 முதல் 2002 ஆம் ஆண்டு வரை கே.ஆர். நாராயணன், 2002 முதல் 2007 வரை ஏ.பி.ஜே. அப்துல் கலாம், 2007 முதல் 2012 வரை பிரதிபா தேவிசிங் பாட்டீல், அதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி ஆகியோர் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகித்தனர். நாட்டின் 15 ஆவது குடியரசுதலைவரான ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்காலம் அடுத்தவாரத்துடன் நிறைவடைவதால் அரசு சார்பில் அவருக்கு பிரியாவிடை அளிக்கப்படுகிறது.
– செய்தியாளர்: விக்னேஷ்முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.