முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பு

கரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக குணமடைந்துவிட்டதை அடுத்து அவர் இன்று காலை 9.45 மணியளவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனையிலிருந்து நேரடியாக தலைமைச் செயலகம் வந்துள்ள அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வீடு திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இன்னும் ஒரு வாரமாவது ஓய்வு எடுக்க வேண்டுமென்று மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக கடந்த கடந்த ஜூலை 11-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பில், நூக்கம்பாளையம் மேம்பாலம், அரசன்கழனி ஏரி மற்றும் மதுரப்பாக்கம் ஓடை – தெற்கு டி.எல்.எப். ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பங்கேற்றார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டர். பின்னர் ஜூலை 14 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருடைய உடல்நிலை தேறியதை அடுத்து இன்று (ஜூலை 18) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.