தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் கவுண்டமணிக்கு தனி இடம் உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக 2016-ம் ஆண்டு ‘வாய்மை’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.
தனக்கு வரும் பெரும்பாலான பட வாய்ப்புகளை கவுண்டமணி மறுத்து வருகிறார், அவரது கிண்டலான கேரெக்டரை, மீண்டும் திரையில் காண தமிழ் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் சிவாவின் பெரியப்பாவாக நடிப்பார் என்றும், படம் முழுவதும் அவருடன் தோன்றுவார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன், கவுண்டமணியின் தீவிர ரசிகர். டி.வி.யில் பணிபுரியும் போது, அவரைப் போன்றே மிமிக்ரி செய்து அசத்துவார்.
‘மாவீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படம் மூலம் கியாரா அத்வானி தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மிஷ்கின் முக்கிய வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார், வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் ‘மகாவீருடு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது.
இப்போது கவுண்டமணியின் வருகையால் இந்தத படத்துக்கு எதிர்பாப்பு பெரியதாகிவிட்டது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ’டான்’ படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது அனுதீப் இயக்கத்தில் உருவாகும் ’பிரின்ஸ்’ திரைப்படமும் இந்த வருட தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ‘எஸ்.கே 21’ படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“