சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டமுடிந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள இனம் தமிழ் இனம். தாழ்ந்துகிடந்த தமிழகத்தை தலைநிமிர்ச் செய்த நாள்தான் ஜூலை 18. தமிழ்நாடு நாள் என்று சொல்லும்போதே என் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று முதலமைச்சர் கூறினார்.