கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரிய நெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தாா்.
மாணவி கடந்த 13-ஆம் திகதி மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தாா்.
இதையடுத்து, அவரது மரணத்துக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி அவரது பெற்றோா், உறவினா்கள், பொதுமக்கள் கடந்த 4 நாள்களாகப் போராட்டம் நடத்திவந்த நிலையில் மாணவியின் உடலையும் வாங்க மறுத்தனா்.
தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம்! 2 ஆசிரியைகள் கைது.. முக்கிய தகவல்
ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது ஆடைகளிலும் ரத்த கரைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்து இருப்பதாகத் தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஸ்ரீமதியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ள நீதிபதி மறுபிரேத பரிசோதனையின்போது தந்தை உடனிருக்க அனுமதி அளித்துள்ளார்.
மேலும் இறுதிச்சடங்கு அமைதியாக நடைபெற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு மாணவி ஸ்ரீமதியின் தாயே காரணம்! பள்ளி பெண் நிர்வாகி வெளியிட்ட வீடியோ