வாலி : எம்.ஜி.ஆர் வீட்டு மீன் குழம்பு; எஸ்.ஜே.சூர்யா கொடுத்த தங்கச் சங்கிலி! – நினைவுதினப் பகிர்வு

* கவிதை சுரங்கம்… ரைமிங் பொயட் கவிஞர் வாலியின் நினைவு நாள் இன்று. 2013 ஜூலை 18 -ல் அவரின் உடல் பிரிந்து, நினைவுகளால் நம்மில் வாழ்ந்து வருகிறார். அவரைய பற்றிய சுவாரஸ்ய நினைவலைகளில் சில இங்கே!

* வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சினிமாவில் அவர் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்திருந்தாலும், பாடலாசிரியர் ஆகவேண்டும் என்று அவர் ஆரம்ப காலங்களில் எண்ணியதில்லை. திருச்சி வானொலியில் அவர் நாடகங்களுக்கான கதைகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அதன்பின், சினிமாவில் தன் கதைகள் படமாக வேண்டும் என ஆசைப்பட்டே கதை, வசனம் எழுத வேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், காலம் அவரை கவிஞராக்கியது. டி.எம்.செளந்தரராஜனுடன் ஏற்பட்ட பழக்கத்தைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த அவர் சினிமாவில் பாடல் எழுதத் தொடங்கினார்.

கவிஞர் வாலி

* வாலியை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்த பெருமை பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு உண்டு. வாலி. ரங்கராஜனாக ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது, “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்ற பாடலை ஒரு தபால் அட்டையில் எழுதி டி.எம்.சௌந்தரராஜனுக்கு அனுப்பி வைத்தார். அந்த பாடல் பின்னர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு இனிமையான குரலில் பரவசப்படுத்தியது.

* நடிகர் நாகேஷும், வாலியும் இணைபுரியாத சிநேகிதர்கள். இருவரும் வறுமையில் உழன்ற போது பட்டினியோடு சினிமா வாய்ப்புகள் தேடித் திரிந்ததுண்டு. இருவரும் ஒருநாள் பசியோடு இருக்கும் போது நாகேஷ், வாலியிடம் சொல்லியிருக்கிறார்.. ‘ஒரு சார்மினார் சிகரெட் வாங்கி, புகைக்கலாம். சிகரெட்டை ஒரு இழு இழுத்துவிட்டு புகையை வெளியே விடாமல் அடக்கி வைத்து, தண்ணீர் குடித்தால் ரெண்டு நாட்களுக்கு பசியெடுக்காது’ என சொல்லியிருக்கிறார். அப்படியொரு வறுமையையும் கடந்துவ் வந்து சாதித்தவர்கள் அவர்கள் இருவரும்!

* வாலிக்கு மீன் குழம்பு ரொம்பவே பிடிக்கும். அதிலும் எம்.ஜி.ஆர்.விட்டு மீன் குழம்பு என்றால் அலாதி ப்ரியம். முதல் நாள் வைத்த மீன் குழம்பு எம்.ஜி.ஆர்.வீட்டில் ரொம்பவே ஸ்பெஷல். வாலி- கலைஞர் இருவரின் நட்பை ஊர் அறியும்.

வாலி

* அப்போதைய இளம் இயக்குநர்களில் வாலியின் மனதில் இடம் பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. ‘வாலி’ படம் வெளியானதும் எஸ்.ஜே.சூர்யாவை கூப்பிட்டு, ‘உன் படம் வொண்டர்புல். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா, என் பெயரில்தான் நீ படமே எடுத்திருக்கே’ என புன்னகையாய் பூரித்து சொல்ல.. வெட்கத்தில் நெளிந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

* வாலியின் பாடல்கள் பலதும் ரீமிக்ஸ் ஆனாலும் கூட ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘நியூ’வில் வந்த ‘தொட்டால் பூ மலரும்’ பாடலை ரீமிக்ஸ் செம ஹிட் ஆனது. அந்த பாடல் வெளியானதும் எஸ்.ஜே.சூர்யா வாலியை சந்தித்து ஐந்து பவுன் சங்கிலி பரிசளித்தார். ‘யோவ் இத்தனை வருஷத்துக்கு பிறகும் இந்த பாட்டு எனக்கு தங்கத்தை சம்பாதிச்சு கொடுத்திருக்கு’ என ஆனந்தாமாகியிருக்கிறார் கவிஞர்.

கருணாநிதியுடன் வாலி

* தமிழக முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் என அத்தனை பேரிடமும் நெருக்கமான ப்ரியமான நட்புண்டு. வாலியின் ஆரம்ப காலத்தில் கை தூக்கிவிட்ட எம்.ஜி.ஆருக்காக ‘என்னை பாட வைத்தவன் ஒருவன்.. என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்’ என நன்றி மிகுதியோடு பாடல் எழுதியிருக்கிறார். ஜெயலிதாவை குறிப்பிடும் போது, ‘இந்தியாவே புகழும் சந்தியாவின் மகளே’ என பாராட்டியும் இருக்கிறார். கலைஞரை இன்னும் அதிக உரிமையாய் நேசித்தவர் ‘ஏ.எம். முதம் பி.எம்.வரை உழைக்கும் ஒரே சி.எம். இவர்’ என நெஞ்சில் இருந்து பாராட்டியதும் உண்டு.

* வாலி தன் கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருந்த போது பாடல் எழுதுவதற்காக அவர் வாங்கி வைத்திருந்த அட்வான்ஸ் தொகையை, (சில லட்சங்கள் இருக்குமாம்) அதை கொடுத்த அத்தனை பேரையும் கூப்பிட்டு படுக்கையில் இருந்தபடியே செக் போட்டு திருப்பிக் கொடுத்த நற்பண்பாளர் என்பார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.