போபால்: மத்திய பிரதேசத்தின் நர்மதை ஆற்றில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் புனே நோக்கிச் சென்ற பேருந்து, தார் மாவட்டம் கல்கோட்டில் உள்ள நநர்மதை ஆற்றின் மேலே உள்ள பாலத்தில் சென்றுகொண்ருந்தபோது, மழையின் காரணமாக பேருந்தின் டயர் வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
சுமார் 10 உயரத்தில் இருந்து விழுந்த பேருந்தில், 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படு கிறது. ஆற்றில் தண்ணீர் ஒடிக்கொண்டிருந்தால், பேருந்து தண்ணீரில் மூழ்க்கியது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் கிராமமக்கள், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்துமீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் மூழ்கியதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. 15 பேர் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டதாக மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். பஸ்சில் சென்ற பல பயணிகளை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என் அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது.