டெல்லியில், சிசிடிவி கேமரா உள்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,397 டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்களை அமைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் சுமார் 35 லட்சம் பயணிகள் பயனடைய உள்ள நிலையில், பேருந்துகள் எப்போது பேருந்து நிறுத்தத்திற்கு வரும், அதன் பயண நேரம், சேருமிடம் உள்பட பல தகவல்களை டிஜிட்டல் திரையில் பயணிகள் அறியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அவசரகால பொத்தான் (Panic button), சிசிடிவி கேமரா உள்பட பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.