Infinix 32 Y1 Price in India: ஸ்மார்ட் டிவி வேணும்; ஆனா பத்தாயிரத்துக்கு மேல ஒரு பைசா செலவு பண்ண முடியாது என்று இருக்கும் பயனர்களை குறிவைத்து இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த வாரம் ஒரு மலிவு விலை ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. இந்த வகையில் இன்பினிக்ஸ் Y1 எச்டி ஸ்மார்ட் டிவி தற்போது பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மலிவான ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்புபவர்கள் அவசியம் இந்த டிவியை பரிசீலிக்கலாம். இது பெசல்-லெஸ் ஃப்ரேம், நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் ரிமோட் கண்ட்ரோலின் வடிவமைப்பும் மெலிதானது. இதில் யூடியூப், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ் போன்றவற்றின் தனித்துவமான பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tecno Spark 9: டெக்னோ ஸ்பார்க் 9 அறிமுகம் – உலகின் முதல் 11ஜிபி ரேம் கொண்ட மலிவு விலை ஸ்மார்ட்போன்!
இன்பினிக்ஸ் 32 Y1 ஸ்மார்ட் டிவி விலை மற்றும் சலுகைகள் (Infinix 32 Y1 Smart Tv Price and Offers in India)
மலிவு விலையில் இந்த ஸ்மார்ட் டிவியை இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்குக் கொண்டுவந்துள்ளது. ரூ.8,999 ரூபாய் என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட் டிவியின் முதல் விற்பனை இன்று பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் தொடங்கியது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு சலுகை வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக டிவியை ரூ.8,099 என்ற விலையில் வாங்கலாம்.
இது மட்டுமில்லாமல் ரூ.8,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த டிவி வாங்கும் பயனர்களுக்குக் கிடைக்கும். அப்படியென்றால் ரூ.99க்கு இந்த டிவியை வாய்ப்பிருந்தால் வாங்கலாம்.
இன்பினிக்ஸ் 32 Y1 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Infinix 32 Y1 Smart Tv Features)
புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ தரத்திலான ஒலியை பயனர்கள் கேட்டு மகிழலாம். இது சிறந்த ஒலி தரத்திற்காக 20W பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் 512MB ரேம், 4ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட குவாட் கோர் புராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் உள்ள வீடியோக்களை பார்க்க Chromecast ஆதரவும் இந்த டிவியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி HLG சிக்னலையும் ஆதரிக்கிறது. Infinix 32 Y1 ஸ்மார்ட் டிவிகள் பயனர்களுக்கு உடனடி இணைப்பு விருப்பங்களை வழங்க Wi-Fi, 3 HDMI, 2 USB, LAN, Optical, Miracast ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகின்றன.
அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் Redmi 10 போனை வெறும் 249 ரூபாய்க்கு வாங்குவது எப்படி?
Infinix 32 Y1 ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைப் பொருத்தவரை, இந்த ஸ்மார்ட் டிவியானது Prime Video, YouTube, SonyLiv, Zee5, ErosNow, AajTak போன்ற முன் நிறுவப்பட்ட ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுடன் வருகிறது. இதன் மூலம் ஆப் ஸ்டோரில் இருந்து எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யாமல் பயனர்கள் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் செய்திகளைப் பார்க்க முடியும்.
இன்பினிக்ஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. இதன் காட்சி தரமும் சிறந்ததாக நிறுவனம் மேம்படுத்தி வழங்கியுள்ளது. இது ஒரு பட்ஜெட் விலையில் சினிமா தரத்திலான படங்களை பிரதிபலிக்கும் என்று நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது.