உத்தரபிரதேசம்: பல்வேறு மாநிலங்களில் சவான் மாதத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாட்டின் வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் சவான் மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஒவ்வொரு திங்களன்றும் பக்தர்கள் விரதமிருந்து சிவனை வழிபடுவார்கள். சவான் மதத்தின் முதல் திங்களான இன்று உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கங்கையாற்றில் புனித நீராடினர்.ஜார்கண்டில் கன்வர் யாத்திரை சென்ற பக்தர்கள் டியோக்கரில் உள்ள கோவில்களில் கூடி சவான் மாத வழிபாட்டில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு அணியில் ஈடுபட்டனர். மத்திய பிரதேசத்தின் உஜாயினியில் உள்ள மஹா காளிஸ்வரர் கோவிலில் இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரப்பட்டிருந்தது. அங்குள்ள சிவலிங்கத்தில் பாலபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆரத்தி நடந்தது. டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள கோவிலில் சாமான் மாத்தையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். இதேபோல பீகாரின் பாட்னா பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.