வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கேரளா, கடந்த 12ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்சில் இருந்து கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர், தெற்கு ஆசியாவிலேயே குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.
இந்த நிலையில், கேரளாவில் மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‛கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த 31 வயது நபர் தற்போது பரியராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்’ என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement