பேஸ்புக், கூகுள் வருவாயில் இனி உங்களுக்கும் பங்கு உண்டு! அதிரடி உத்தரவை பிறப்பிக்கும் அரசு!

Facebook Revenue: சமூக வலைத்தள நிறுவனங்களில் வருவாய் என்பது நாம் நினைவில் தங்காத எண்களை உடையது. ஆம், அவர்கள் கொண்டிருக்கும் பயனர்களின் பதிவுகளில் இருந்து அவர்களுக்கு அளப்பரிய வருவாய் கிடைக்கிறது.

இதில் ஒரு சிறிய அளவிலான தொகையை மட்டுமே பயனர்களுக்கு, அதாவது கிரியேட்டர்களுக்கு டெக் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த புதிய அறிவிப்பின் வரம்பில் உள்ள பிராண்டுகளில்
கூகுள்
, மெட்டா, ட்விட்டர், அமேசான் ஆகியவை அடங்கும்.

வெறும் 99 ரூபாய்க்கு Infinix 32 Y1 ஸ்மார்ட் டிவி – ஷாக் ஆகாம முதல்ல ஆர்டர போடுங்க!

பெரும் வருவாயை ஈட்டும் டெக் நிறுவனங்கள்

இந்த நிறுவனங்களின் சமூக தளங்களில் பதிவிடப்படும் அசல் உள்ளடக்கத்திற்கான வருவாயைப் பகிர்ந்து கொள்ள அரசு தரப்பில் இருந்து கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுவரை, தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் உள்ளடக்க பயன்பாட்டிற்காக செய்தி தளங்கள், வெளியீட்டு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவில்லை. சரியான சட்ட வழிமுறைகள் வகுக்கப்படாததால், பெரும் தொகையை டெக் நிறுவனங்கள் வருவாயாக ஈட்டுகின்றன.

Jio Fiber: 3 மாத ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் – பலன்கள் ஏராளம்!

செய்தி நிறுவனங்களுக்கு நல்வாய்ப்பு

இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, வருவாய் ஆதாரமின்றி இருக்கும் நிறுவனங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் விதமாக அமையும். விளம்பர வருவாயின் மீதான கட்டுப்பாட்டுடன், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர்களின் வருவாயில் உள்ள பெரும் பங்கைப் பெறுவதன் மூலம் அதிகப் பலன்களைப் பெறுகின்றன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதைய சூழ்நிலையில் ஏற்றத்தாழ்வை சரிசெய்ய புதிய விதிகளை உருவாக்குவது குறித்து அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார் என்று தெரியவருகிறது.

மேலதிக செய்தி: James Webb Space Telescope: பிரமிக்க வைக்கும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி – வியாழனின் படங்களை வெளியிட்ட நாசா!

மேலும், “தற்போது பெரிய டெக் நிறுவனங்கள் கையாளும் டிஜிட்டல் விளம்பரத்தின் சந்தை சக்தி, இந்திய ஊடக நிறுவனங்களுக்கு பாதகாமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, இதனை சட்டத்தின் உதவியுடன் ஒழுங்குப்படுத்துவது கட்டாயமானதாகக் கருதப்படுகிறது” என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் செய்திகள் வெளியீட்டாளர்கள் சங்கம் கருத்து

முக்கிய மற்றும் சிறிய வெளியீடுகளின் நிலையான செய்திகளின் மூலம் பயனடையும் மிகப்பெரிய சமூக ஊடக தளங்களில் Facebook ஒன்றாகும். கூகுள் செய்திகள் பல்வேறு வெளியீடுகளின் உள்ளடக்கத்தை ஒன்றிணைக்கும் மற்றொரு தளமாகும். மெகா தேடுபொறியானது முடுக்கப்பட்ட மொபைல் பக்கங்கள் (AMP) வடிவில் செய்திகளின் தனிப்பயனாக்கப்பட்ட க்யூரேஷனையும் வழங்குகிறது.

“செய்தி இணையதளங்களில் வரும் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பயனர்கள், கூகுள் வாயிலாக வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் சில வெளியீடுகளை மற்றவற்றுடன் ஒப்பிடும் விதத்தில் கூகுள் மிகவும் வெளிப்படையாக இல்லை. அல்காரிதம்களில் ஏற்படும் மாற்றங்களும் சரியாக தெரிவதில்லை.” என்று டிஜிட்டல் செய்திகள் வெளியீட்டாளர்கள் சங்கம் (டிஎன்பிஏ) தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.