ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹின்டல்கோ நிறுவனம், இஸ்ரேலின் பினர்ஜி, ஐ.ஓ.பி. நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் மின் வாகனங்களுக்கான அலுமினியம் ஏர் பேட்டரிகளை உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பேட்டரிகளுக்கான அலுமினிய தகடுகளை உற்பத்தி செய்யவும், பேட்டரிகளில் பயன்படுத்தப்பட்ட அலுமினியத்தை மறுசுழற்சி செய்யவும் அந்நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
ஆக்ஸிஜனுடன் சுற்றுப்புற காற்றில் அலுமினியம் வினைபுரியும் போது உருவாகும் அலுமினியம் ஹைட்ராக்சைட் மூலம் அலுமினியம் – ஏர் பேட்டரிகள் ஆற்றலை உற்பத்தி செய்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த எடை போன்ற காரணிகளால் அந்த பேட்டரிகள், மின் வாகனங்கள் இயங்கும் தூரத்தை கணிசமாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.