இப்படியும் ஒரு நிறுவனமா.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

இந்திய வர்த்தகச் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது, உதாரணமாகச் சமீபத்தில் வாரத்தில் 4 நாள் வேலை என்ற திட்டத்தைப் பல நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல விடுமுறை எடுக்கும் முறையை நீக்கி வருகிறது.

இதைத் தொடர்ந்து தற்போது ஒரு முக்கியமான நிறுவனமான ரெடிங்டன் என்னும் நிறுவனம் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஐடி ஊழியர்களே உஷாரா இருங்க.. டிசிஎஸ், அக்சென்சர், ஹெச்சிஎல் திடீர் முடிவு..!

ரெடிங்டன் இந்தியா

ரெடிங்டன் இந்தியா

லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் தீர்வுகள் வழங்குநரான ரெடிங்டன் இந்தியா, இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கான வருகைப் பதிவு முறையை (Attendance) ரத்து செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ரெடிங்டன் பணியாளர்கள் அலுவலகம், வீடு அல்லது வேறு எந்தத் தொலைதூர இடத்திலிருந்தும் பணிபுரிந்தாலும் இது பொருந்தும்.

சுந்தர் ராஜன்

சுந்தர் ராஜன்

ரெடிங்டன் இந்தியாவின் துணைத் தலைவர் (ஹெச்ஆர்) சுந்தர் ராஜன் கூறுகையில் நிறுவனத்தின் கலாச்சாரத்தின் மையத்தில் நம்பிக்கை உள்ளது, எங்கள் ஊழியர்கள் நிறுவனம் மற்றும் அதன் வளர்ச்சிக்கான வலுவான அர்ப்பணிப்புடன் சுய உந்துதல் கொண்டவர்கள் என்றும் கூறினார்.

வருகை பதிவு
 

வருகை பதிவு

வருகை பதிவு முறையை (Attendance) அகற்றுவதன் மூலம் தொழிலாளர்களின் நெகிழ்வுத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதாகும். இது ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் மத்தியில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆர்வத்தை வலுப்படுத்த உதவுகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ரெடிங்டன் இந்தியா 1993ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த மாற்றம் பல முன்னணி நிறுவனங்கள் மத்தியில் முன் உதாரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே பல ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வருகை பதிவு முறையை அகற்றப்பட்டு உள்ளது.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இலங்கையை விட இந்தியா மோசம்.!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamilnadu Based Redington India Has Removed Attendance System For Employees

Tamilnadu Based Redington India Has Removed Attendance System For Employees இப்படியும் ஒரு நிறுவனமா.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

Story first published: Monday, July 18, 2022, 20:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.