இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளாகவே மின்சார வாகனங்கள் மீதான ஆர்வமானது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மின்சார இரு சக்கர வாகனங்கள் மீதான ஆர்வம் என்பது பெரியளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும் தங்களது சந்தை பங்கினை தக்க வைத்துக் கொள்ள மின்சார வாகன உற்பத்தியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
ஒலா நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு என, குறிப்பாக இருசக்கர வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறையலாம்.. எச்சரிக்கும் மார்கன் ஸ்டான்லி!
பேட்டரி இன்னோவேஷன் மையம்
ஓலாவின் தலைமை செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் பெங்களூரிவில், பேட்டரி இன்னோவேஷன் மையத்தினை (BIC) அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளளார்.
இது சர்வதேச அளவில் மிக மேம்படுத்தப்பட்ட உலகத்தரம் வாய்ந்த அதி நவீன அம்சங்களுடன் கூட மேம்பாட்டு மையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு
பெங்களூரிவில் அமையவிருக்கும் இந்த பேட்டரி இன்னோவேஷன் மையத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் பிஹெச்டி உள்ளிட்ட ஊழியர்களை பனியமர்த்த திட்டமிட்டுள்ளது.
இதன் செயல்பாடுகள் அடுத்த மாதத்தில் இருந்து செயல்படத் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பவிஷ் அகர்வால் கருத்து
இது குறித்து ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவினையும் பதிவிட்டுள்ளார்.
‘இது ஆசியாவிலேயே பிரம்மாண்ட மையாக இருக்கும் என்றும், அந்த அலுவலகத்தில் இருக்கும் பிரம்மாண்ட வசதிகளையும் குறிக்கும் விதமாக வீடியோவினையும் பதிவிட்டுள்ளார்.
என்ன செய்யப்போகிறது?
இது புதுமைகளை உருவாக்கவும், உலகின் மேம்படுத்தப்பட்ட மலிவு விலையிலான தயாரிப்புகளுக்கும் வழிவகுக்கும். குறிப்பாக இந்த மையம் பேட்டரி பேக் அப் மாடல் என பலவற்றிலும் கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது.
ஓலா அதன் பிரம்மாண்ட வாகன உற்பத்தி தொழிற்சாலையினை தமிழகத்தில் ஓசூரில் நிறுவியுள்ளது. உற்பத்தியும் செய்து வருகின்றது.
தொடர் விரிவாக்கம்
இந்தியாவின் முன்னணி வாடகை வாகன சேவை நிறுவனமாக இருந்த ஓலா, தமிழகத்தில் முதன் முதலாக அதன் உற்பத்தி ஆலையினை அமைத்தது. அதன் மூலம் தற்போது உற்பத்தியினையும் செய்து வருகின்றது. தற்போது பெங்களூரில் இந்த இன்னோவேஷன் மையத்தினை அமைக்கவுள்ளது.
Ola announces $500 million battery innovation centre in bangalure
Ola announces $500 million battery innovation centre in bangalure/பெங்களூரில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஓலா.. எதற்காக தெரியுமா?