ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் சென்ற ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது, ரெப்போ விகிதம் 4.90 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டதால், நிலையான வைப்புத் தொகைக்கான (ஃபிக்ஸட் டெபாசிட்) வட்டி விகிதம் அதிகரித்துவருகிறது.
இதில் நிதி முதலீட்டில் அபாயமும் குறைவு என்பதால் பெரும்பாலும் வாடிக்கையாளர்ள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கிடையில் ஓராண்டு உள்ளிட்ட குறுகிய கால வைப்பு திட்டத்துக்கும் வங்கிகள் 6 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. மேலும் வங்கிகளும் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நெகழ்வான வைப்பு காலத்தையும் வழங்குகின்றன.
அந்த வகையில், வைப்புத் தொகைக்கு நல்ல வட்டி வழங்கும் சில தனியார் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
பந்தன் வங்கி
நிகழாண்டின் ஜூலை 4ஆம் தேதி பந்தன் வங்கி வாடிக்கையாளர்களின் வைப்பு தொகைக்கான வட்டியை உயர்த்தியது. இது பொதுமக்களுக்கு 3 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 3.75 சதவீதம் முதல் 6.35 சதவீதம் வரையும் உள்ளது. இருப்பினும் வங்கி ஒரு வருட முதிர்ச்சி வைப்புத் தொகைக்கு பொதுமக்களுக்கு 6.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமாகவும் உள்ளது. அதுவே 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகால வைப்புத் தொகைக்கு பொதுமக்களுக்கு 6.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதமும் வழங்குகிறது.
டிசிபி வங்கி
இந்த வங்கி ஜூன் 22ஆம் தேதி ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத் தொகை வட்டி விகிதங்களை உயர்த்தியது. அந்த வகையில் 7 நாள்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 4.80 சதவீதம் முதல் 6.60 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதமாக வட்டி உள்ளது. 18 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு தொகைக்கு அதிகப்பட்சமாக பொதுமக்களுக்கு 6.60 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதமாகவும் உள்ளது.
ஐடிஎஃப்சி வங்கி
ஐடிஎஃப்சி வங்கி ஜூலை 1ஆம் தேதி 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்பு தொகை வட்டி விகிதத்தை உயர்த்தியது. இது 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ள வைப்பு தொகைக்கு 6.25 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 6.75 சதவீதமாகவும் உள்ளது.
ஒரு நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள வைப்பு தொகைக்கு பொதுமக்களுக்கு 6.50 சதவீதமாகவும், மூத்தக் குடிமக்களுக்கு வட்டி விகிதம் 7 சதவீதமாகவும் உள்ளது.
இண்டஸ் வங்கி
இண்டஸ் வங்கி ஜூன் 21ஆம் தேதி ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகையை உயர்த்தியது. 7 நாள்கள் முதல் 61 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத் தொகைக்கு 3.25 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்குகிறது. 2 ஆண்டுகள் அல்லது 61 மாதங்களுக்கு குறைவான டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 6.50 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கி ஜூன் 8ஆம் தேதி வைப்புத் தொகை வட்டியை திருத்தியது. அதன்படி, ஒரு வருடத்தில் முதிர்;சியுறும் வைப்புகளுக்கு பொதுமக்களுக்கு 6.25 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
யெஸ் வங்கி
யெஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகையை பொதுமக்களுக்கு 6 சதவீதம் ஆகவும், மூத்தக் குடிமக்களுக்கு 6.50 சதவீதம் ஆகவும் உயர்த்தியுள்ளது.