இந்திய கடன் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட உரம்: அடுத்து இரண்டு வாரங்களில்…

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட உரம் அடுத்த இரண்டு வாரங்களில் ,இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 21,000 மெட்ரிக் உரம் அடங்கும். இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கவுள்ள 65,000 மெட்ரிக் தொன் உரத்தில் 44,000 மெட்ரிக் தொன் உரம் அடங்கிய கப்பல் முதற்கட்டமாக கடந்த வாரம் இலங்கையை வந்தடைந்தது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற உரம் தற்போது இலங்கை உர நிறுவனம் மற்றும் லங்கா கொமர்ஷல் உர நிறுவனம் மூலமும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

அந்த உரத்தை  விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான  பணம் இன்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.