தடம் புரண்ட சரக்கு ரயில்; ரயில் சேவை பாதிப்பு| Dinamalar

தாஹோத் : குஜராத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து, மேற்கு ரயில்வே அதிகாரிகள் நேற்று கூறியதாவது: மத்திய பிரதேசத்திலிருந்து சரக்கு ரயில் ஒன்று நேற்று முன்தினம் குஜராத்துக்கு சென்றது. ரயில், லிம்கேடா ரயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது திடீரென தடம்புரண்டது.

இதில், உயிர்ச் சேதம் ஏதுமில்லை. இதையடுத்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், 29 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.