திருவனந்தபுரம் : பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை, கேரளாவைச் சேர்ந்த மற்றொருவருக்கு உறுதியாகி உள்ளது. இது, நம் நாட்டில் பதிவாகியுள்ள இரண்டாவது பாதிப்பு.விலங்குகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவக் கூடியது, குரங்கு அம்மை. இது, சில ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே தென்படும். ஆனால், தற்போது, பல நாடுகளிலும் இதன் பாதிப்பு பதிவாகியுள்ளது.
சமீபத்தில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு, குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது உறுதியானது. இது, நம் நாட்டில் பதிவான முதல் பாதிப்பு.இந்நிலையில், கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நபருக்கு, குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, சமீபத்தில் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு விமானம் வாயிலாக அவர் வந்துள்ளார்.உடலில் சிவப்பு நிற புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டு, பரிசோதனை செய்ததில், அவருக்கு குரங்கு அம்மை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement