ஜர்னி பிரேக் என்றால் என்ன தெரியுமா? அட… ரயிலில் இப்படி ஒரு வசதி கூட இருக்கா?

நாம் அடிக்கடி ரயிலில் பயணம் செய்திருந்தாலும் சில பொதுவான விதிகளை மட்டுமே நாம் தெரிந்து வைத்திருப்போம்.

சில முக்கிய வசதிகளை தெரிந்து வைத்திருந்தால் அந்த வசதி நமது பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4000 கோடி ரூபாய் கடன் வாங்கி சென்னை நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? 4 பேர் கைது!

அந்த வகையில் நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில் பயணிகள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வசதிகளில் ஒன்றுதான் ‘ஜர்னி பிரேக்’ என்ற வசதி. இந்த வசதியால் ரயில் பயணிகளுக்கு என்ன லாபம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

 ஜர்னி பிரேக்

ஜர்னி பிரேக்

இந்திய ரயில்வேயில் அதிகம் பேருக்கு தெரியாத ஒரு வசதி தான் இந்த ஜர்னி பிரேக். நீங்கள் ஒரு ரயிலில் 500 கிமீக்கும் மேல் ஒரு பயண டிக்கெட்டில் பயணம் செய்தால், 501 கிலோமீட்டருக்கு அப்புறம் வழியில் உள்ள எந்த நிலையத்திலும் இறங்கி 2 நாட்களுக்குள்
ஜர்னி பிரேக் எடுக்கலாம். அதற்காக நீங்கள் அதிகப்படியான கட்டணம் எதுவும் தர வேண்டிய அவசியம் இல்லை.

சென்னை-நாகர்கோவில்

சென்னை-நாகர்கோவில்

உதாரணத்திற்கு நீங்கள் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தமாக ரயிலில் டிக்கெட் புக் செய்து உள்ளீர்கள் என்று வைத்து கொள்வோம். அதே நாளில் திடீரென உங்களுக்கு பாண்டிச்சேரிக்கு செல்ல வேண்டிய ஒரு முக்கிய பணி வருகிறது. அப்போது நீங்கள் 536வது கிலோ மீட்டரில் உள்ள விழுப்புரம் ஸ்டேஷனில் இறங்கி பாண்டிச்சேரி சென்று அடுத்த நாள் மீண்டும் விழுப்புரம் ஸ்டேஷனிலிருந்து அதே டிக்கெட்டில் சென்னைக்கு பயணம் செய்யலாம். அதற்கு நீங்கள் விழுப்புரம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் டிக்கெட்டை காண்பித்து ஜர்னி பிரேக் என்று குறித்து கையெழுத்து வாங்க வேண்டும்.

 2000கிமீக்கு மேல் 2 ஜர்னி பிரேக்
 

2000கிமீக்கு மேல் 2 ஜர்னி பிரேக்

500 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் ஒற்றை பயண டிக்கெட்டில் மட்டுமே இந்த ஜர்னி பிரேக் அனுமதிக்கப்படுகிறது. 500 கிமீக்குள் இந்த வசதி அனுமதிக்கப்படாது. தொடக்க நிலையத்தில் இருந்து 501வது கிமீ முதல் 1000 கிமீ வரையிலான டிக்கெட்டுகளில் ஒரு இடைவேளை பயணம் மட்டுமே அனுமதிக்கப்படும். 2000 கிமீக்கு மேல் உள்ள நீண்ட தூரத்திற்கான டிக்கெட்டுகளில் அதிகபட்சம் இரண்டு ஜர்னி பிக்ரேக் அனுமதிக்கப்படும்.

ரயில்வே இணையதளம் கூறுவது என்ன?

ரயில்வே இணையதளம் கூறுவது என்ன?

ஜர்னி பிரேக் குறித்து ரயில்வே இணையதளம் மேலும் சில தகவல்களை பயணிகளுக்கு விளக்கியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

1. ஒருவர் 800 கிமீ தூரத்திற்கு ஒற்றை பயண டிக்கெட் வைத்திருந்தால் அவர் 423 கிலோமீட்டர் தூரத்தில் ஜர்னி பிரேக் வசதியை பயன்படுத்த முடியாது.

2. ஒருவர் 600 கிமீ தூரத்திற்கு ஒற்றை பயண டிக்கெட் வைத்திருந்தால் அவர் 501 கிமீ தூரத்தில் தனது ஜர்னி பிரேக் வசதியை அதிகபட்சம் 2 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

3. ஒருவர் 1050 கிமீ தூரத்திற்கு ஒற்றை பயண டிக்கெட் வைத்திருந்தால் 801 கிமீ தூரத்தில் தனது ஜர்னி பிரேக் வசதியை 2 நாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

4. ஒருவர் 2000 கிமீ தூரத்திற்கு ஒற்றை பயண டிக்கெட் வைத்திருந்தால் 800 கி.மீ., 905 கி.மீ மற்றும் 1505 கி.மீ. என மூன்றில் இரண்டு ஜர்னி பிரேக் பயணியின் வசதியின்படி பயன்படுத்தி கொள்ளலாம்.

 

24 மணி நேரத்திற்கு குறைவாக அனுமதி இல்லை

24 மணி நேரத்திற்கு குறைவாக அனுமதி இல்லை

ஒற்றை பயண டிக்கெட் வைத்திருக்கும் ஒருவர் 24 மணி நேரத்திற்கு குறைவாக ஜர்னி பிரேக் அனுமதி கிடையாது. உதாரணமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் ஒரு பயணி விழுப்புரத்தில் ஜர்னி பிரேக் பயன்படுத்தி ஒருசில மணி நேரங்களில் அதாவது 24 மணி நேரத்திற்கும் குறைவாக வேறு ரயிலில் பயணிக்க அனுமதி கிடையாது.

சில ரயில்களில் விதிவிலக்கு

சில ரயில்களில் விதிவிலக்கு

மேலும் இந்த ஜர்னி பிரேக் வசதி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாபதி எக்ஸ்பிரஸ் போன்ற குறிப்பிட்ட ரயில்களில் அனுமதிக்கப்படாது. அவை அனைத்தும் உள்ளடங்கிய கட்டண அமைப்பை பாயின்ட்-டு-பாயிண்ட் அடிப்படையில் தனித்தனியாக கொண்டுள்ளன. எனவே இந்த ரயில்களில் மட்டும் ஜர்னி பிரேக் வசதி கிடையாது.

என்னென்ன நிபந்தனைகள்

என்னென்ன நிபந்தனைகள்

பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை ஜர்னி பிரேக் எடுக்கும் நிலையத்திலேயே அங்கீகரிக்க வேண்டும். அங்கீகாரம் நிலையக் குறியீடு, ஸ்டேஷன் மாஸ்டரின் கையெழுத்து மற்றும் தேதி ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டரின் பரிந்துரைக்கப்பட்டபடி ஒப்புதல் பெறாதவர்கள், முறையான டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் நபர்களாகக் கருதப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Break Journey Ticket Rules in Indian Railway!

Break Journey Ticket Rules Indian Railway! | ஜர்னி பிரேக் என்றால் என்ன தெரியுமா? அட… ரயிலில் இப்படி ஒரு வசதி கூட இருக்கா?

Story first published: Tuesday, July 19, 2022, 6:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.