ரஷ்யா ஏற்கனவே கடந்த ஆண்டு 7.2 பில்லியன் ரூபிள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக 390 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக விதித்துள்ள இந்த அபராதம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா அபராதம் விதித்தது ஏன் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
48 மணிநேரத்தில் 3 வெளிநாட்டு விமானங்கள் கோளாறு.. அவசர அவசரமாக தரையிறக்கம்..!
$390 மில்லியன் அபராதம்
ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளரின் அறிவிப்பின்படி, உக்ரைனில் நடந்த போர் குறித்து போலி செய்திகள் உட்பட ரஷ்யா சட்டவிரோதமாகக் கருதப்பட்ட உள்ளடக்கத்தை நீக்கத் தவறியதற்காக ரஷ்ய நீதிமன்றத்தால் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சொந்தமான தேடல் நிறுவனமான கூகுளுக்கு 21.8 பில்லியன் ரூபிள் அதாவது $390 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டாவது அபராதம்
கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திற்கு 7 பில்லியன் ரூபிள் (USD 129 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இது ரஷ்யாவில் கூகுளின் விற்றுமுதல் சதவீதத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய அபராதமாகும்.
யூடியூப் மீதும் கோபம்
ஆல்பாபெட் நிறுவனத்தின் யூடியூப் செயலி மீது ரஷ்யாவுக்கு பெரும் கோபம் உள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து யூடியூபில் அபாண்டமான தகவல்களுடன் கூடிய வீடியோ வெளி வந்து கொண்டிருப்பதாகவும், இதனை யூடியூப் நிர்வாகம் கட்டுப்படுத்தவில்லை என்றும் ரஷ்யா கோபம் கொண்டுள்ளது.
யூடியூப் மீது குற்றச்சாட்டு
ரஷ்ய கட்டுப்பாட்டாளரின் கூற்றுப்படி, யூடியூப், உக்ரைனில் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போக்கை பற்றிய போலி வீடியோக்களை நீக்கவில்லை என்றும், ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளை இழிவுபடுத்துகிறது என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில் தீவிரவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை அனுமதித்தது குறித்தும் யூடியூப் மீது ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
திவால்
முன்னதாக, கூகுளின் ரஷ்ய துணை வங்கி கணக்கு பறிமுதல் செய்யப்பட்டது என்றும், இதன் காரணமாக அந்நிறுவனம் ரஷ்யாவில் திவால் நிலைக்கு அருகே சென்றதாகவும் கூறப்படுகிறது. கூகுள் ரஷ்யாவின் வங்கிக்கணக்கை ரஷ்ய அதிகாரிகள் கைப்பற்றியதால், ரஷ்யாவை சேர்ந்த ஊழியர்களை பணியமர்த்துவது மற்றும் ஊதியம் வழங்குவது, சப்ளையர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்துவது மற்றும் பிற நிதிக்கடமைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட எங்கள் ரஷ்யா அலுவலகம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பதில் இல்லை
சமீபத்திய அபராதம் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்திற்கு சில விளக்கங்களை மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை கூகுள் நிறுவனம் அதற்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Russia fines Google $390 million for repeated content violations!
Russia fines Google $390 million for repeated content violations! | கூகுள் நிறுவனத்திற்கு $390 மில்லியன் அபராதம்…. ரஷ்யாவின் கோபத்திற்கு காரணம் இதுதான்!