மும்பை : வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பணம், கடந்த 2020 – 21 நிதியாண்டில் கணிசமாக குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த 2020 – 21 நிதியாண்டில், கொரோனா பரவல் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பும் பணம் குறைந்துள்ளது.
மாறாக அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகள், இந்தியாவுக்கு பணம் அனுப்புவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளன. மதிப்பீட்டு காலத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பணத்தில், 36 சதவீதம் இந்நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டு உள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்சை விட, அமெரிக்காவிலிருந்து மதிப்பீட்டு காலத்தில் அதிக பணம் அனுப்பப்பட்டுள்ளது. அனுப்பப்பட்ட மொத்த பணத்தில், அமெரிக்காவின் பங்கு 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தை பெறும் முக்கியமான மாநிலங்களான கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெறும் பணம் குறைந்துள்ளது. மேலும், கேரளாவைவிட அதிக பணம் பெற்ற மாநிலமாக, மஹாராஷ்டிரா மாறி உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இந்நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அதிகம் இருந்தனர். ஆனால், அண்மைக் காலமாக உத்தர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிகம் பேர் வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement